கரூர் - நாமக்கல் இடையே விமான நிலையம் - ஈஸ்வரன் எம்.எல்.ஏ கோரிக்கை

கரூர் - நாமக்கல் இடையே விமான நிலையம் - ஈஸ்வரன் எம்.எல்.ஏ கோரிக்கை

கரூர் - நாமக்கல் இடையே விமான நிலையம் அமைக்க வேண்டும் - சட்டமன்றத்தில் ஈ.ஆா்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.

கரூர் - நாமக்கல் இடையே விமான நிலையம் அமைக்க வேண்டும் - சட்டமன்றத்தில் ஈ.ஆா்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு நீதித்துறை அமைச்சர் இந்த ஆண்டு சமர்ப்பித்திருக்கின்ற நிதிநிலை தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் இந்த ஆண்டு சமர்ப்பித்து இருக்கின்ற நிதிநிலை அறிக்கை அனைவருக்கும் மனநிறைவாக, யாரையும் விட்டு விடாமல் சிறந்த நிதி நிலை அறிக்கையாக சமர்ப்பித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலோடு நிதி அமைச்சர் அவரோடு நிதித்துறை செயலாளர் இணைந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும் பயன்பெறுகிற வகையில் ஒரு சீரானவளர்ச்சியை தமிழகம் பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஓரவஞ்சனையாக செயல்படுகின்ற ஒன்றிய அரசை போல் இல்லாமல் ஒட்டுமொத்த மாநிலமும் வளர வேண்டும் என்ற அந்த எண்ணத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த நிதிநிலை அறிக்கை, ஒன்றிய அரசு ஒரு கண்ணிலே சுண்ணாம்பு, ஒரு கண்ணிலே வெண்ணெய் வைத்து நிதியை குறைவாக கொடுத்தால் கூட மாநிலத்தின் வருவாய் அதிகப்படுத்தி எல்லா திட்டங்களையும் நிறைவேற்றியும், சென்ற ஆண்டு இருந்த பற்றாக்குறை, இந்தாண்டு குறைத்து இருக்கிறார்கள் என்று சொன்னால், அந்த அளவுக்கு கவனத்தோடு இந்த நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த அரசினுடைய முக்கியமான செயல்பாடு என்றால் திட்டங்களை தீட்டினால் மட்டும் போதாது, நிதி ஒதுக்கினால் போதாது, நிதியும், திட்டங்களும் மக்களுக்கு சென்று சேர வேண்டும். இந்தத் திட்டங்கள் மக்களுக்கு சேர அரசும், அரசு அலுவலா்களும் மக்களோடு தொடர்பு வேண்டும். கடந்த 2 1/2 ஆண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் செயல்படுத்தி வரும் அனைத்து திட்டங்களும், அதிகாரிகளையும் மக்களையும் தொடர்புப்படுத்தி இருக்கின்ற திட்டங்களாக உள்ளது. கடைசியாக “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” இந்தத் திட்டத்தின் மூலமாக மாவட்ட ஆட்சியரும், அதிகாரிகளும் கிராமத்தில் தங்கி இருந்து கள ஆய்வு செய்யக்கூடிய திட்டமாக உள்ளது. மக்களோடு தொடர்பு கொள்ளக்கூடிய அந்த திட்டம்.

பெண்களை முன்னேற்றி விட்டால் அந்த குடும்பமே முன்னேறும் என்ற நோக்கில் முதல்வர் திட்டங்களை தீட்டி உள்ளார். வீடு முன்னேறினால் நாடு முன்னேறும். அதை கணக்கில் வைத்து தான் அத்தனை திட்டங்களையும் பெண்களுக்காக செயல்படுத்தி வருகிறார். பேருந்தில் இலவச பயணம், மகளிர் உரிமை தொகை திட்டம் என பல திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்துவதை மற்ற மாநிலங்கள் தமிழகத்திற்கு வந்து நேரடியாக பார்த்து எப்படி செய்கிறார்கள் என அறிந்து அவர்களுடைய மாநிலத்தில் செயல்படுத்த உள்ளார்கள். அரசு பள்ளி மட்டுமல்லாது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதை வரவேற்கின்றேன்.

காலை சிற்றுண்டி திட்டம் தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். காலை சிற்றுண்டியில் முட்டையை சேர்க்க வேண்டும். அது குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தாக இருக்கும். அங்கன்வாடிகளில் வாரத்திற்கு மூன்று முட்டை வழங்கப்படுகிறது. அதை வாரம் முழுவதும் முட்டை என அறிவிக்க வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு நேரடியாக சத்து கிடைக்க உள்ளது. இதனை பரிசீலிக்க வேண்டும். ஏழை, எளியோருக்கு வீடு வேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் வீடில்லாதவருக்கு வீடு வழங்கும் திட்டத்தின் 8 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அதுவும் இந்த ஆண்டிலேயே ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு கட்டிடம் கட்டித் தரப்படும் என்று தெரிவித்துள்ளீர்கள். 60 ஆண்டுகளுக்கு மேல் கட்டப்பட்ட சேலம் பொறியியல் கல்லூரிக்கு தனியார் கல்லூரிகளுக்கு இணையாக ஆடிட்டோரியம் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். சென்னை கோவையை போல் கோபிக்கும் நூலகம் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கைக்கு செவிமடுத்த முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார. தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்விக்கு போகும் மாணவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் திட்டம் அறிவித்துள்ளது. பெருமைக்குரிய விஷயம். அதே போல் இந்தத் திட்டத்தின் மூலம் பத்தாம் வகுப்பு முடித்து ஐடிஐ செல்லும் மாணவர்களுக்கும் மாதம் ஆயிரம் வழங்க பரிசீலனை செய்ய வேண்டும். அரசு கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பில் 10% முன்னுரிமை வழங்க பரிசீலனை செய்ய வேண்டும். இதனால் அரசு கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சேரும் எண்ணம் அதிகரிக்கும்.

கோவணம் கட்டிக்கொண்டு விவசாயம் செய்யும் கொங்கு வேளாளர் கவுண்டர்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்புகளும் 10% வாய்ப்பு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 40 கோடி ரூபாய் மதிப்பில் தீவிர சிகிச்சை மையம் வழங்கப்பட்டுள்ளது. கோவையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையை அனைவரும் பயன்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளோடு செய்து கொடுக்க வேண்டும் அது கோவை மாநகரத்திற்கும் கொங்கு மண்டலத்திற்கும் அவசியமானதாக இருக்கும். இன்றைக்கு அரசு மருத்துவமனையில் இருக்கும் பயனாளிகளுக்கும், நோயாளிகளோடு வந்தவர்களும் பயன்படுத்தும் வகையில் நூலகம் அமைத்திட வேண்டும். குறைந்தபட்சம் மாவட்ட தலைமை மருத்துவமனையிலாவது நூலகம் அமைத்திட வேண்டும்.

வேலைவாய்ப்பு மற்றும் பின்தங்கியுள்ள தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும். தொழில் வளம் பெருக கோவை விமான நிலையம் விரிவுபடுத்தப்பட வேண்டும். அதேபோல் கரூர், நாமக்கல், ராசிபுரம், வெள்ளக்கோயில், காங்கேயம் உள்ளிட்ட பகுதிகள் தொழில் நகரங்களாக உள்ளது. எனவே கரூர் - நாமக்கல் இடையே விமான நிலையம் அமைக்க வேண்டும். தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் என்பது தொலைநோக்கு பார்வை அதை நான் வரவேற்கிறேன். பல்வேறு நீர் மேலாண்மை திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது

பாண்டியாறு, பொன்னம்பலஆறு, திருமணிமுத்தாறு போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே நீர்ப்பாசன திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். அதேபோல் நீரேற்று பாசனம் 30 திட்டங்கள் கிடப்பில் கிடக்கிறது. நீரேற்று பாசனம் விவசாயிகள் ஒன்றாக சேர்ந்து தண்ணீர் கொண்டு வருகிறார்கள். அவர்கள் நிலத்தடி நீரை மேம்படுத்துகிறார்கள். அப்படி மேம்படுத்துபவர்களுக்கு அனுமதி தராமல் 30 கோப்புகள் கிடப்பில் கிடக்கின்றன. அதனை பரிசீலிக்க வேண்டும். திருச்செங்கோட்டிற்கு புறவழிச்சாலை தோக்கவாடி முதல் பால்மடை வரை, பள்ளிபாளையம் முதல் சங்ககிரி சாலை வரை புதிய புறவழிச்சாலை கொண்டு வர வேண்டும்.

அதே போல் அகழ்வாராட்சியில் நாட்டிலேயே அதிக முதலீடு செய்யும் ஒரு மாநிலம் தமிழ்நாடு என்பதை குறிப்பிட்டு உள்ளீர்கள். தமிழர்களுக்கு நமது அடையாளம் முக்கியம். தமிழர்களுக்கு பயிற்சி அளிக்க தனியாக பயிற்சி வகுப்புகள், உறைவிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதையும் நான் வரவேற்கிறேன். அதேபோல் அகழ்வாராட்சியில் ஈரோடு மாவட்டம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் அகழ்வாராட்சிகள் தொடங்கப்பட வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் கேல் இந்தியா திட்டத்தின் கீழ் செயற்கை ஓடுதள பாதை அமைக்கப்பட வேண்டும். டாஸ்மாக் காலி பாட்டில்கள் எந்த கடையில் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள வேண்டும். டெல்லி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் வேளையில் விவசாய பட்ஜெட்டை பொருத்தவரை விவசாயிகள் அத்தனை பேரும் வரவேற்று இருக்கிறார்கள். விவசாயத் துறை அமைச்சருக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

இந்தியாவில் காந்தி ஆசிரமங்கள் உள்ளது. தமிழ்நாட்டில் பல இடங்களில் காந்தி ஆசிரமங்கள் உள்ளது. அங்கே தயாரிக்கிற பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி. அதை விடுவிப்பதற்கு ஒன்றிய அரசிடம் வலியுறுத்த வேண்டும். நெல் கொள்முதல் கிடங்குகள் அதிக படுத்த வேண்டும். எந்தவிதமான குறைபாடு இல்லாமல் நடைபாண்டில் பொங்கல் பரிசாக வேஷ்டி, சேலை சிறப்பாக வழங்கப்பட்டுள்ளது. அதனால் விசைத்தறிகள் மட்டும் வாழாது. நிறைய விசைத்தறிகள் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். அரசு வழங்கும் அத்தனை சீருடைகளும் விசைத்தறியாளர்களிடம் வாங்கினால் அந்த விசைத்தறியாளர்களை வாழ வைக்க முடியும். அதற்கான முயற்சி எடுக்க வேண்டும். அறநிலையத்துறை இருப்பது மக்களுக்கு இப்பொழுது தான் தெரிந்துள்ளது. அறநிலையத்துறைக்கு ஒரு கோரிக்கை விடுக்கிறேன். திருச்செங்கோடு மலைக்கும், கோவை மருதமலைக்கும் பார்க்கிங் வசதிகள் இல்லை. அதனால் விசேஷ நாட்களில் வாகனங்கள் நிறுத்த இடமில்லாமல் உள்ளது. இந்த இரண்டு மலைகளுக்கும் பார்க்கிங் வசதி செய்து தர வேண்டும். தமிழகத்தில் பல ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் மின் வசதி பெறாமல் உள்ளனர். மெரினா, பெசன்ட் நகர், கோவளம் ஆகிய கடற்கரைகள் மேம்படுத்தப்படும் என அறிவித்துள்ளீர்கள். மகிழ்ச்சியான செய்தி. ஆனால் தாய்லாந்தில் இருப்பது போல் சென்னை முதல் பாண்டிச்சேரி வரை மொத்த கடலையும் சுற்றுலா மையமாக மாற்றினால் சுற்றுலாத் துறைக்கு நல்ல வருமானம் கிடைக்கும். தீர்த்த மலை, சங்ககரி இரு மலையும் சுற்றுலாத்தலமாக அறிவித்து மேம்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஈ.ஆா்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ பேசினார்.

இதனுடைய தொழில் துறை அமைச்சர் பேசும் போது, கோவையில் விமான நிலையம் அமைக்க விரிவுபடுத்தப்பட கூடுதலாக இடம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. 468.83 ஏக்கர்நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் 434.33 ஏக்கர்கையகப்படுத்தப்பட்டு விட்டது. இன்னும் 34 1/2 ஏக்கர் பாக்கி உள்ளது. அதையும் விரைவில் கையகப்படுத்தி வெகு விரைவாக விரிவாக்க பணிகள் நடைபெறும்.

தொடர்ந்து வீட்டுவசதி துறை அமைச்சர் பேசும்போது மருதமலையில் 60 வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது கீழே உள்ள இடத்தில் சீர்படுத்தினால் அங்கேயும் 60 வண்டிகள் நிறுத்தலாம் ஒரு கிலோமீட்டர் முன்னாடி 5 ஏக்கர் லீசுக்காக கேட்டுள்ளோம் அந்த ஐந்து ஏக்கர் வந்தால் முழுவதுமாக பார்க்கிங் வசதி செய்து கொடுக்கலாம். என்றார்.

தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் பேசும் போது, திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் இந்த அரசு கீழடி அகழ்வாராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து செயலாற்றி வருகிறது என்றார்.

Tags

Next Story