மூதாட்டி மீது அடையாளம் தெரியாத டூவீலர் மோதி விபத்து

நடந்து சென்ற மூதாட்டி மீது அடையாளம் தெரியாத டூவீலர் மோதி விபத்து. காவல்துறை வழக்கு பதிவு.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுக்கா, செந்தூரப்பட்டி அருகே உள்ள புது காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால் மனைவி வீரம்மாள் வயது 76. இவர் பிப்ரவரி 23ஆம் தேதி மாலை 4.30 மணி அளவில், கோவை- கரூர் சாலையில் அமராவதி மருத்துவமனை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டூவீலரை ஓட்டி வந்த நபர், நடந்து சென்ற வீரம்மாள் மீது மோதிவிட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டார். இந்த விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த வீரம்மாளுக்கு மூக்கு, காது உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயமேற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வீரம்மாள் மகன் மாயவன் வயது 36 என்பவர், அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், மூதாட்டி மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது? அதை ஓட்டிச் சென்ற நபர் யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags

Read MoreRead Less
Next Story