காமராஜர் இறப்பிற்கு அவசரநிலை பிரகடனம் சட்டம் தான் காரணம்
பாஜக
ஈரோடு மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது , நாடு முழுக்க அவசர நிலை பிரகடனம் இன்று நடைமுறைப்படுத்திய நாள் என்றும் 1975 ஜூன்25 ம் நாள் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி , குடியரசுத்தலைவர் ப்க்ரூதின் அலி ஆகியோர் 352 வது சட்டப்பிரிவான உள்நாட்டு பிரச்சினைகள்ளுக்கான அவசரநிலை பிரகடனத்தை நடைமுறைப்படுத்தியதாக தெரிவித்தார்.
இந்திராகாந்தி தேர்தலில் முறைகேடு செய்த்தாக அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டதை ஒடுக்க அவசரநிலை பிரகடனம் கொண்டு வந்த்தாகவும் , அவசரநிலை பிரகடனம் அமுலிருந்த 21 மாதமாக ஜனநாயக இருண்ட காலம் என்றார். அவசரநிலை பிரகடனம் காலத்தில் பொதுமக்களுக்கு கட்டாய கருத்தடை அறுவைசிகிச்சை செய்யப்பட்டதாக தெரிவித்த தேசிய பொதுக்குழு உறுப்பினரான பழனிச்சாமி , 1975 டிசம்பரில் கோவையில் திமுக அவசரநிலை பிரகடனத்தை எதிர்த்து மாநாடு நடத்தியதாகவும் , இதனால் பிப்ரவரியில் திமுக ஆட்சி ஆட்சி கலைக்கப்பட்டு , ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் இந்தியா முழுவதும் , 1 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எவ்விதj காரணமின்றி கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்தாக தெரிவித்தார்.
காமராஜர் இறப்பிற்கு கூட இந்த அவசரநிலை பிரகடனம் சட்டம் காரணம் என்றும் இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதால் எதிர்காலத்தில் ஜனநாயகம் காக்கபட வேண்டும் என்பதால் 50 ஆண்டுகளாகியும் இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை பாஜகவினரால் வெளிகொண்டு வரப்படுகிறது என்றார்.