நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் BLA 2 சரிபார்த்து மாற்றி அமைக்கும் பணி - மாவட்டக் கழகச் செயலாளர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி அறிவிப்பு !!

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் BLA 2 சரிபார்த்து மாற்றி அமைக்கும் பணி - மாவட்டக் கழகச் செயலாளர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி அறிவிப்பு !!
X

BLA 2 சரிபார்த்து மாற்றி அமைக்கும் பணி - 

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் BLA 2 சரிபார்த்து மாற்றி அமைக்கும் பணி - மாவட்டக் கழகச் செயலாளர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி அறிவிப்பு !!

நாமக்கல், இராசிபுரம், சேந்தமங்கலம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதியில் நாமக்கல் ஒன்றியம், மோகனூர் ஒன்றியம், சேந்தமங்கலம் ஆகிய ஒன்றிய, நகர, பேரூா்களில் வார்டு எண் மற்றும் பூத் எண் வாரியாக ஆய்வுகூட்டம் நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் BLA 2 சரிபார்த்து மாற்றி அமைக்கும் பணி தலைமைக் கழக தேர்தல் தொகுதி பார்வையாளர்கள் முன்னிலையில் நாளை (13 11.2024) புதன்கிழமை கீழ் அட்டவணைபடி நடைபெற உள்ளது என்றும் அதற்கான இடங்களையும் நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அறிவித்துள்ளார்.

பரளி ஊராட்சி, கீழ்பரளியில் காலை 8.00 மணிக்கு கிளைச் செயலாளர் கௌரிசங்கர் இல்லத்திலும், 8.45 மணிக்கு அரூர் ஊராட்சி அரூர் கிளைச் செயலாளர் சிவசுப்ரமணி இல்லத்திலும், 9.30 மணிக்கு ஆண்டாபுரம் ஊராட்சி மாவட்ட பிரதிநிதி கார்த்தி இல்லத்திலும், மாலை 5.00 மணிக்கு ஒருவந்தூர் ஊராட்சி ஒருவந்தூர் சிவன்கோவில் வளாகத்திலும், மாலை 6.00 மணிக்கு குமரிபாளையம் ஊராட்சி சங்கரம்பாளையத்தில் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் பி.சித்தார்த்தன் இல்லத்திலும்,

நாமக்கல் சட்டமன்றத் தொகுதி மோகனூா் ஒன்றியத்தில் காலை 9.40 மணிக்கு வளையப்பட்டி ஊராட்சி வளையப்பட்டி சந்தை சமுதாயகூடத்திலும், காலை 10.30 மணிக்கு என்.புதுப்பட்டி பூவராகவன் இல்லத்திலும், நாமக்கல் ஒன்றியத்தில் காலை 8.00 மணிக்கு நாமக்கல் ஒன்றியம் வசந்தபுரம் ஊராட்சி நடராஜன் இல்லத்திலும் நடைபெற உள்ளது.

இதே போல் இராசிபுரம் சட்டமன்ற தொகுதி இராசிபுரம் நகரத்தில் காலை 10.00 மணிக்கு பூத்எண் - 137, 138, 141, 144, 145, 146, 147 ஆகியவற்றுக்கு குமரவேல்மண்டபம், காலை 11.00 மணிக்கு பூத்எண் - 106, 107, 108, 130, 131, 132, 133, 134, 135, 136 ஆகியவற்றுக்கு ரோட்டரிஹால் (ரயில்வேநிலையம்) நண்பகல் 12.00 மணிக்கு பூத்எண் - 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120 ஆகியவற்றுக்கு 5-வது வார்டு செயலாளர் மோகன்இல்லத்திலும், மதியம் 1.00 மணிக்கு பூத்எண் - 129, 139, 140, 142 ஆகியவற்றுக்கு MLA அலுவலகம் அருகிலும், மாலை 3.00 மணிக்கு பூத்எண் - 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 143 ஆகியவற்றுக்கு நகரக் கழகச் செயலாளர் என்.ஆா்.சங்கர் இல்லத்திலும் ஆய்வுக் கூட்டம் நடைபெறும் என கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி அறிவித்துள்ளார்.

Tags

Next Story