பழவேரி பள்ளியில் ஆசிரியர் இல்லாமல் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறி

பழவேரி பள்ளியில் ஆசிரியர் இல்லாமல் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறி
X

ஆசிரியர் இல்லாத பள்ளிக்கூடம்

பழவேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் இல்லாமல் குழந்தைகள் மட்டும் வந்து செல்வதால், அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், பழவேரி கிராமத்தில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 10 நாட்களாக ஆசிரியர் யாரும் இல்லாமல் குழந்தைகள் மட்டும் வந்து செல்வதால், அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. பழவேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 30 குழந்தைகள் பயில்கின்றனர்.

இப்பள்ளியில், தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் என இரண்டு ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். இந்நிலையில், சில நாட்களாக தலைமை ஆசிரியர் விடுப்பில் உள்ளார். உதவி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.

இதனால், தலைமை ஆசிரியர் விடுப்பு எடுக்கும் நாட்களில், பள்ளியில் ஆசிரியர் யாரும் இல்லாமல் மாணவர்கள் வெறுமனே வகுப்பறையில் இருந்து விட்டு, மாலையில் வீடு திரும்பும் நிலை இருந்து வருவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, பழவேரி கிராமத்தினர் கூறியதாவது: பழவேரி தொடக்கப்பள்ளியில், சில நாட்களாக தலைமை ஆசிரியர் விடுப்பில் உள்ளார்.

இதனால், உதவி ஆசிரியரும் இல்லாததால், குழந்தைகள் பள்ளிக்கு வந்து வெறுமனே வகுப்பறையில் இருந்து விட்டு மாலையில் வீடு திரும்பும் நிலை உள்ளது. ஓரிரு நாட்கள் மட்டும் வேறு பள்ளியில் இருந்து, மாற்று ஆசிரியர் வந்து குழந்தைகளுக்கு வகுப்பெடுத்தனர்.

எனினும், அவர்கள் மதிய நேரத்தில் வந்து மாலைக்குள் வீடு திரும்புகின்றனர். ஆசிரியர் இல்லாமல் குழந்தைகள் வகுப்பறையில் உள்ளதால், அம்மாதிரியான நேரங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

Tags

Next Story