நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களிடையே மோதல் !

நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களிடையே மோதல் !
X

வழக்கறிஞர்களிடையே மோதல்

சென்னை நீதிமன்ற வளாகத்தில் நாற்காலிகளை வீசி எறிந்து இருதரப்பு வழக்கறிஞர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்துக்கு உட்பட்ட செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் அண்மையில் விபத்து தொடர்பாக வழக்கு ஒன்றைப் பதிவு செய்திருந்தனர். விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு பெற்றுக் கொடுப்பது தொடர்பாக நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் வழக்கறிஞர்கள் சிலர் எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த வழக்கை மற்றொரு வழக்கறிஞரிடம் கைமாற்றிவிடுவதற்கான பேச்சுவார்த்தை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. பேச்சுவார்த்தை திடீரென வாக்குவாதமாக மாறி, கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தகவல் அறிந்து எழும்பூர் காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்து மோதலை விலக்கி விட்டனர்.

இந்த தாக்குதலில் 2 பேர் படுகாயமடைந்தனர். தாக்குதலில் காயமடைந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் விஜயகுமார் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையிலும், வழக்கறிஞர்கள் செந்தில்நாதன், சக்திவேல் ஆகியோர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர்.

Tags

Next Story