சிவகாசி அருகே பயறுவகை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த விவசாயிகள் பயிற்சி முகாம்..

சிவகாசி அருகே பயறுவகை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த விவசாயிகள் பயிற்சி முகாம்..
X

விவசாயிகள் பயிற்சி முகாம்

சிவகாசி அருகே பயறுவகை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த விவசாயிகள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

சிவகாசி அருகே பயறுவகை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த விவசாயிகள் பயிற்சி முகாம்.. விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டாரத்தில் 2024-25ம் நிதியாண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள எரிச்சநத்தம் கிராமத்தில் விரிவாக்க சீரமைப்புத்திட்டத்தின் கீழ், பயறு வகைகள் சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த தொழில் நுட்பப்பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சிக்கு சிவகாசி, வேளாண்மை உதவி இயக்குநர் சுந்தரவள்ளி தலைமையேற்று வேளாண்மைத்துறை மூலம் மானிய விலையில் வழங்கிய இடுபொருட்களான நுண்ணூட்ட உரங்கள், உயிர் உரங்கள் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் பற்றியும், அவற்றினை பயன்படுத்தும் முறைகள் மற்றும் அவற்றின் நன்மைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.

Tags

Next Story