மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் - கலெக்டரிடம் மனு !

மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் - கலெக்டரிடம் மனு !
X

கலெக்டரிடம் மனு

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு, 2022ல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், 51 வார்டுகளுக்கும் கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேயராக தி.மு.க.,வைச் சேர்ந்த மகாலட்சுமியும், துணை மேயராக காங்., கட்சியைச் சேர்ந்த குமரகுருநாதனும் தேர்வு செய்யப்பட்டனர். மேயர் மகாலட்சுமி மீது அ.தி.மு.க., மட்டுமல்லாமல், தி.மு.க., காங்., சுயேட்., என, 33க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் அதிருப்தி தெரிவித்து வந்தனர். இந்நிலையில், ஜூன் 7ம் தேதி, மேயர் மகாலட்சுமி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, தி.மு.க., அ.தி.மு.க, என கவுன்சிலர்கள் 33 பேர், கலெக்டரிடம் மனு அளித்தனர். திட்டவட்டம் இந்த விவகாரம், மேயர் மகாலட்சுமிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அதிருப்தி திமுக கவுன்சிலர்களை அழைத்து, அமைச்சர் நேரு, மாவட்ட செயலர் சுந்தர் என, மூத்த நிர்வாகிகள் பேச்சு நடத்தியும், மேயர் மகாலட்சுமியை மாற்ற வேண்டும் என, கவுன்சிலர்கள் பலரும் திட்டவட்டமாக உள்ளனர். மாநகராட்சி கூட்டம் ஜூன் மாதம் நடக்காத நிலையில், ஜூலை மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, மாநகராட்சி நிலைக் குழுவின் உறுப்பினர்கள், 10 பேர் திடீரென தங்களது பதவியை ராஜினாமா செய்திருப்பது, காஞ்சிபுரம் மாநகராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சியில், பணிக்குழு, நகரமைப்புக்குழு, சுகாதாரக்குழு, கணக்குக்குழு, வரிவிதிப்புக் குழு, கல்விக்குழு, நியமனக்குழு என, ஆறு நிலைக் குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவுக்கும் தலைவர், உறுப்பினர்கள் 6 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

Tags

Next Story