திருட்டு வழக்கில் தொடர்புடைய இளைஞர் படுகொலை - எஸ்பி விசாரணை

திருட்டு வழக்கில் தொடர்புடைய இளைஞர் படுகொலை - எஸ்பி விசாரணை
X
காவல் நிலையம் 
அழகர் கோவில் அருகே திருட்டு வழக்கில் தொடர்புடைய இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து மாவட்ட எஸ்பி அரவிந்தன் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

மதுரை மாவட்டம் அழகர் கோவில் அருகே நாயக்கர்பட்டி எனும் கிராமத்தில் திருட்டு வழக்கில் தொடர்புடைய கடச்சனேந்தல் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்ற வாலிபரை மர்ம நபர்கள் பட்டப் பகலில் வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்தில் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் நேரில் விசாரணை நடத்தினார்.

மதுரை கடச்சனேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம்(27).இவர் மீது இருசக்கர வாகனம் திருட்டு வழிப்பறி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் ஊமச்சிகுளம் சத்திரப்பட்டி அப்பன் திருப்பதி உள்ளிட்ட காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊமச்சிகுளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வழிப்பறி செய்ததாக கைது செய்யப்பட்டு,கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டிலிருந்து சென்ற முருகானந்தத்தை காணவில்லை என அவரது பெற்றோர் குமரேசன் உள்ளிட்டோர் தேடி வந்த நிலையில் நேற்று மாலை அழகர் கோவில் அருகே உள்ள நாயக்கர்பட்டி கிராம கண்மாய் பகுதியில் அவரை மர்மநபர்கள் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்துள்ளனர். தப்பிஓடி வந்த முருகானந்தம் சாலையில் சரிந்து விழுநது நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.இதனை அடுத்து சம்பவம் அறிந்து வந்த மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் நேரில் விசாரணை நடத்தி மோப்பநாய் மற்றும் தடய அறிவியல் துறை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இக்கொலைச் சம்பவம் தொடர்பாக அப்பன் திருப்பதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டு வழக்கில் தொடர்புடைய நபர் பிணையில் வந்து சில நாளில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story