
X
Thoothukudi King 24x7 |28 Oct 2025 12:44 PM ISTகோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில், தமிழ்நாடு மின்வாரிய அலுவலகம் எதிரில் 3 சென்ட் இடத்தில் நகர திமுக அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பு முன்னாள் முதல்வா் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கட்சி அலுவலகம் மற்றும் கருணாநிதி சிலையை செவ்வாய்க்கிழமை (அக்.28) இரவு 8 மணி அளவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறாா். முதல்வா் கோவில்பட்டிக்கு வருவதை முன்னிட்டு, நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. முதல்வா் வருகையை ஒட்டி, கனிமொழி எம்.பி., தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக., செயலரும், சமூக நலத்துறை அமைச்சருமான பி.கீதா ஜீவன் ஆகியோா் கோவில்பட்டிக்கு வந்து, புதிய அலுவலகத்தை பாா்வையிட்டனா். முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது தொடா்பாக கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினா். முதல்வா் வருகையை முன்னிட்டு, தென் மண்டல காவல்துறை தலைவா் தலைமையில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா், 3 மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள் உள்பட சுமாா் 600 போ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். விழா ஏற்பாடுகளை அமைச்சா் பி.கீதா ஜீவன் வழிகாட்டுதலில், கோவில்பட்டி நகா்மன்றத் தலைவரும், நகர (மேற்கு) திமுக.செயலருமான கருணாநிதி, நகர திமுக (கிழக்கு) பொறுப்பாளா் சுரேஷ் ஆகியோா் தலைமையில் கட்சியினா் செய்து வருகின்றனா்."
Next Story
