இயற்கை வேளாண் பயிற்சி

இயற்கை வேளாண் பயிற்சி
X

ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்வது குறித்து பயிற்சி நடந்தது.


ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்வது குறித்து பயிற்சி நடந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்வது குறித்து, முதற்கட்டமாக 30 சமுதாய வன பயிற்றுனர்களுக்கு பயிற்சிஅளிக்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதுாரில் நடைபெற்ற பயிற்சி முகாமை, மாவட்ட திட்ட இயக்குனர் - மகளிர் திட்டம் கவிதா தலைமை தாங்கினார்.

திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு வேளாண் பல்கலை பேராசிரியர்கள் கவிதா மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர் இயற்கை முறையில் உரம் தயாரித்தல், மண் வளத்தை பேணுதல், பூச்சி மற்றும் நோய் கட்டுப்படுத்த பூச்சி மருந்து தயாரித்தல் குறித்து, பயிற்சி அளித்தனர். மேலும், சுற்றுச் சூழலை பாதுகாத்து நஞ்சில்லா உணவு அளித்தல் மற்றும் சந்தைபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு இயற்கை விவசாய முறைகளை குறித்தும், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தைச் சேர்ந்த 30 சமுதாய வன பயிற்றுனர்களுக்கு பயிற்சி அளித்தனர். முகாமில், உதவி திட்ட அலுவலர் பிரபாகரன், வட்டார மேலாளர்லட்சுமணன் உட்பட பலர்பங்கேற்றனர்.

Tags

Next Story