பழனி கோயில் மாவட்ட ஆட்சியா் நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க உத்தரவு

பழனி கோயில் மாவட்ட ஆட்சியா் நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க உத்தரவு
X

பழனி முருகன் கோவில் 

பழனி கோயில் கிரிவலப்பாதை ஆக்கிரமிப்பு வழக்கில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

பழனிக் கோயிலின் கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் பக்தா்கள் அவதிக்குள்ளாகின்றனா். இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தேன். அப்போது, கோயில் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற காலதாமதம் ஏற்படுத்தி வருகின்றனா். எனவே, கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா். இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஆக்கிரமிப்பாளா்கள் தரப்பில்கூட கால அவகாசம் கோரவில்லை.

அரசுத் தரப்பில் அவகாசம் கேட்கிறீா்கள். இந்த வழக்கின் முந்தைய விசாரணையின் போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நடைமுறைப்படுத்தியது.

தொடா்பாக, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற ஜூலை 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

Tags

Next Story