குடும்ப சுமையால் இளம்பெண் தற்கொலை

குடும்ப சுமையால் இளம்பெண் தற்கொலை
X

பைல் படம் 

பூச்சாத்தனுாரை சேர்ந்த ஜாய் சங்கரி குடும்ப சுமையால் காரணமாக மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார்.

பந்தநல்லுார் போலீஸ் சரகத்திற்குஉட்பட்ட பூச்சாத்தனுார் கிழத்தெரு பகுதியைச்சேர்ந்தவர் ராஜேந்திரன். அவரது மனைவி சித்ரா(60). ராஜேந்திரன் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு விபத்தில் இறந்து விட்டார். இவர்களுக்கு 5 மகள் கள், 2 மகன்கள். மூத்த மகள் ஜாய் சங்கரி (39). இவர் தனியார் தொண்டு நிறுவனத்தில் கம்ப்யூட்டர் பயிற்றுனராக பணியாற்றி வந்தார். தனது இரண்டு சகோதரிகளுக்கு ஜாய் சங்கரி முன் நின்று திரும ணம் செய்து வைத்துள்ளார்.

இந்நிலையில் 2 சகோதரிகள் மற்றும் 2 சகோதரர்களை படிக்க வைத்துவந்துள்ளார். தொடர்ந்து மன உளைச்சலில் இருந் ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கதிராமங்க லத்தில் ஜாய் சங்கரி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து பந்தநல்லுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story