நாமக்கல்லில் பிரம்மாண்டமான இமயம் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா

நாமக்கல்லில் பிரம்மாண்டமான இமயம் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. எம்.பி இராஜேஸ்குமார், அமைச்சா் மதிவேந்தன், எம்.எல்.ஏ ராமலிங்கம் ஆகியோர் துவக்கி வைத்தனா்.

நாமக்கல் – திருச்செங்கோடு சாலை, பிள்ளையார் கோவில் பின்புறம், பிரம்மாண்டமான ‘இமயம் சிறப்பு மருத்துவமனை’ திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவுக்கு வந்தவர்களை மருத்துவனை இயக்குனர்கள் டாக்டர் மதன்குமார் பெரியசாமி, டாக்டர் அபிநயா மதன்குமார் ஆகியோர் வரவேற்றனர். நாமக்கல் மாநகராட்சி மேயா் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, மாமன்ற உறுப்பினர் சிவக்குமார், நகர தி.மு.க., செயலாளர் ராணாஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இமயம் சிறப்பு மருத்துவமனையை, எம்.பி.,இராஜேஸ்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அவசர சிகிச்சை பிரிவை, தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார். எக்ஸ்ரே அறையை, நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம் திறந்து வைத்தார். மேலும், உள்நோயாளிகள் பிரிவை, தங்கம் மருத்துவமனை டாக்டர் குழந்தைவேல், தீவிர சிகிச்சை பிரிவை, பொள்ளாச்சி ஆராதனா மருத்துவமனை டாக்டர் சண்முகசுந்தரம், அறுவை சிகிச்சை அரங்கத்தை, சேலம் லண்டர் ஆர்த்தோ சிறப்பு மருத்துவமனை டாக்டர் சுகவனம் ஆகியோர் திறந்து வைத்தனர்.

நாமக்கல் இமயம் சிறப்பு மருத்துவமனையில், எலும்பியல் பிரிவு, மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் பிரிவு, நீரிழிவு பிரிவு, சி.டி.ஸ்கேன், அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், பிஸியோதெரபி போன்றவை செயல்படுகிறது. மேலும், 24 மணி நேரமும், அவசர சிகிச்சை பிரிவு செயல்படும். திறப்பு விழாவில், டாக்டர்கள், நகரின் முக்கிய பிரமுகர்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, தமிழ்செல்வி, லோகச்சந்தர், மேனகா, அன்பரசு, மரகதம் மற்றும் மருத்துவமனை அலுவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story