பந்தநல்லூர் அருகே தேநீர் கடையில் திருட்டு

பந்தநல்லூர் அருகே தேநீர் கடையில் திருட்டு
X

பந்தநல்லூர் அருகே தேநீர் கடையில் திருட்டு

பந்தநல்லூர் அருகே வெள்ளூர் டீ கடையில் கேஸ் சிலிண்டர் பணம் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கும்பகோணம் அருகே பந்தநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது வெள்ளூர். இங்கு டீ கடை நடத்தி வருபவர் துரைச்சாமி மகன் சண்முகம் (60) . சம்பவ நாளன்று கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றார். திரும்ப வந்து பார்த்த போது கடை பூட்டு உடைக்கப்பட்டு 2 கேஸ் சிலிண்டர் மற்றும் பெட்டியில் வைத்திருந்த 12 ஆயிரம் ரூபாய் திருடு போனது. இதுபற்றி பந்தநல்லூர் போலீஸில் புகார் செய்தார். சப்இன்ஸ்பெக்டர் மதியழகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story