தேய்பிறை அஷ்டமி - பயம் போக்கும் பைரவர் வழிபாடு
X
பைரவர் வழிபாடு
தேய்பிறை அஷ்டமி பயம் போக்கும் பைரவர் வழிபாடு
தேய்பிறை அஷ்டமி பயம் போக்கும் பைரவர் வழிபாடு பரமேஸ்வரனான சிவபெருமான் பிரபஞ்ச வடிவானவர். அனைவரையும் காக்கும் பொருட்டு் பல்வேறு திருவடிவங்கள் தாங்கி உருவெடுத்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பவர். அறுபத்து நான்கு திருவடிவங்கள் கொண் டு பிரசன்னமாகி தீமையை அழித்து நன் மையைக் காத்தவர். அவற்றுள், கணபதி, முருகன், வீரபத்திரர், பைரவர், ஐயனார் ஆகியோர் சிவகுமாரர்கள் என்கின்றன புராணங்கள். சிவனின் ரூபமாகத் தோன்றியதால் அவர் களே சிவனாகவும், சிவ குமாரர்களாகவும் விளங்கி, துஷ்ட நிக்ரஹமும் பக்த பரிபால னம் செய்கிறார்கள். 'சிவனே பைரவர்', ‘பைரவரே சிவன்' என்ற போதும் இருவருக்குமான வழிபாடுகள், பூஜைமுறைகள், பலன்கள் எல்லாம் தனித் தனியானவை. இவற்றை அறிந்து கொள் ளும் வகையில் ‘பயம் போக்கும் பைரவர் வழிபாடு’ என்னும் மின்னிதழாக ஆனி மாத இறையருள் மலர்கிறது. பைரவ அவதாரம் பயம் போக்கும் பைரவர் வழிபாடு நான்மு கனாகக் காட்சிதரும் படைப்புக்கடவுள் பிரம்மனுக்கு முற்காலத்தில் ஐந்து தலை கள் இருந்தனவாம். அந்த ஐந்தாவது தலை மறைந்தது எப்படி என்று அறிந்து கொண்டால் பைரவ அவதாரம் குறித்தும் அறிந்துகொண்டு விடலாம். அந்தகாசுரன் என்னும் அரக்கன் மூவுல கை யும் ஆட்டுவித்துவந்தான். அந்தகம் என்றால் இருள். தன் சக்தியால் பிரபஞ்சம் முழுமையையும் இருளாக்க, அஞ்சிநடுங் கிய தேவர்களும் முனிவர்களும் கயிலை யில் சரணடைந்தனர். அப்போது அவர்களுக்கு அபயம் அளித்த சிவன் தன் சக்தியாக பைரவரைப் படைத் தார். பைரவர் இந்த உலகின் ஒளியாகி எண் திசைகளிலும் நின்று ஒளிகொடுத் தார். அப்படி எண் திசைகளிலும் நின்று ஒளிகொடுத்து அந்தகாரத்தை அழித்தவர் களே ‘அஷ்ட பைரவர்கள்' எனப்படுகிறார்கள். பிரம்மன் படைப்புத்தொழில் செய்வதாலு ம் ஐந்துதலைகளை கொண்டிருப்பதாலும் ‘தானே பெரியவன்' என்னும் அகந்தை கொண்டாராம். அகந்தை கொண்டு அவர் எல்லோரையும் எள்ளிநகையாடினார். அப்போது பிரம்மனின் ஆணவத்தை அழி க்கும்படி சிவனடியார்கள் வேண்டிக் கொள்ள சிவன் தன் ரூபமான பைரவரைத் தோற்றுவித்தார். விஸ்வரூபம் கொண்ட பைரவர் தன் விரல் நகத்தினால் பிரம்மா வின் தலை ஒன்றினைக் கொய்தார். அகந் தை நீங்கி அயனும் பைரவரை வணங்கித் தன் பிழை பொறுக்குமாறு வேண்டினார். இருளையும் அகந்தையையும் அழிப்பவர் பைரவர் ஆதலால், இவற்றால் துன்பப்படு பவர்கள் பைரவ வழிபாடு செய்ய அவை அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோ ல மறையும். சிவன் / பைரவர் பயம் போக்கும் பைரவர் வழிபாடு சிவனும் பைரவரும் வேறுவேறல்ல சிவனை லிங்க ரூபமாக வழிபடுகிறோம். பைரவரையோ பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் தரித்தும், சூலாயுதம் ஏந்தி, பாசக் கயிறு கொண்டு, அங்குசம் போன்ற ஆயுதங்களைத் தாங்கிய திருமேனியாக வழிபடுகிறோம். ஆலயங்களில் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி சிவபெருமான் எழுந்தருள்வார். பைரவரோ அனைத்து ஆலயங்களிலும் வடக்கு நோக்கியே நின்றருள்வார். சிவபெருமானின் பிரதான வாகனம் ரிஷபம் பைரவரின் பிரதான வாகனம் நாய். ருத்ரம் என்னும் வேத பாகம் ஈசனை ‘நாய்களின் தலைவன்' என்று புகழ்வது பைரவ ரூபத்தையே. சிவம் என்றால் மங்களம் என்று பொருள். சிவன் மங்கள மூர்த்தியாகத் திகழ்பவர். இந்த உலகில் ஐந்தொழில்களையும் புரி யும் வகையில், வக்ரம், சாந்தம், வசீகரம், ஆனந்தம், கருணை என்னும் ஐந்து குண ங்கள் கொண்ட தன் அம்சங்களை அவர் பிறப்பித்தார். பஞ்ச குணங்களில் பைரவர் வக்ர குணத் தின் அம்சமானவர். பகைவரை அழிக்கும் ருத்ரமூர்த்தியாக விளங்கும் பைரவரை வழிபட பகைமுற்றிலும் மறையும். பைரவ மூர்த்தியை ஏன் வழிபட வேண்டும் ? பயம்போக்கும் பைரவர் வழிபாடு துன்பம் ஒரு வெள்ளம் போல சூழ்ந்துகொண்டு தப்ப வழியின்றித் தவிப்பவர்கள், பற்றிக் கொள்ள உகந்த வழிபாடு பைரவர் வழிபா டு. பைரவர் காவல் தெய்வம் போன்றவர். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து காப்பவர். இவர், நவகிரகங்களில் சனியின் குருவா கக் கருதப்படுபவர். குருவை வணங்கினா ல் சீடன் மகிழ்வார் என்பது இயல்பு. பைர வரை வழிபடுவதன் மூலம் சனியினைக் குளிர்வித்து அவர் பார்வையால் ஏற்படும் கெடுபலன்களை நற்பலன்களாக மாற்றி விட முடியும். அசுர சக்திகளை அழிப்பதற் காகவே அவதரித்த பைரவரை வேண்டிக் கொள்ள பக்தர்களைத் தாக்கும் தீய சக்தி களையும் அவர் அழித்துக்காப்பார். சிவாலயங்களில் அனைத்து வழிபாடுக ளும் காலை சூரியபகவானிடம் தொடங்கி இரவில் பைரவரிடம்தான் நிறைவு பெறும் இரவில் கோயிலைக் காத்தருள்பவர் பைர வர் என்பதால் அவரின் திருவடிகளில் திறவுகோலை சமர்ப்பிக்கும் வழக்கமும் உண்டு. ஆலயத்தைக் காக்கும் பைரவர் அடியார்களின் வீட்டையும் காப்பார். தினமும் ஆலய ம் சென்று பைரவரை வணங்கி வர திருடர் பயம் நீங்கி ஆனந்தமாக வாழலாம். பைரவரை வழிபட உகந்த நேரமும் நாள்களும்... பயம்போக்கும் பைரவர் வழிபாடு பைரவர் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி தினத்தில் அவதரித்தார். எனவே, இந்தப் புண்ணிய தினம் `காலபைரவ அஷ்டமி' என்று போற்றப்படுகிறது. அதனால், பைரவரைத் தேய்பிறை அஷ்ட மி, சதுர்த்தி திதி ஞாயிறு மற்றும் செவ்வா ய்க் கிழமைகளில் வணங்குவது சிறப்பு வாய்ந்தது. இவரை, சிவப்பு நிற ஆடை அணிந்து சிவப்பு நிற மலர்களால் அர்ச்சி த்து, சிவப்பு நிறப் பழங்களை நிவேதனம் செய்து வழிபடவேண்டும். கோயில்களில், ராகுகாலத்தில் நடைபெறு ம் பைரவர் பூஜையில் கலந்துகொள்வது அபரிமிதமான நன்மையைக் கொடுக்கும். இதனால், மனதில் நேர்மறை எண்ணங்க ள் அதிகமாகி வாழ்க்கை செழிப்படையும். ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ... ஸ்ரீ கபால பைரவர் திருவடிகளே போற்றி.
Next Story