இரண்டு தனியார் பஸ்கள் ஜேசிங் பகீர் வீடியோ: நான்கு பேர் கைது

இரண்டு தனியார் பஸ்கள் ஜேசிங் பகீர் வீடியோ: நான்கு பேர் கைது
X
கைது செய்யப்பட்டவர்கள்
இரண்டு தனியார் பஸ்கள் ஜேசிங் பகீர் வீடியோ வெளியான நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூரில் கும்பகோணம் செல்லும் தனியார் பஸ்கள் நாள்தோறும், போட்டி போட்டுக்கொண்டு இயக்குவது என்பது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. இது குறித்து பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும் யாரும் கண்டுக்கொள்வது இல்லை. எந்த நடவடிக்கையும் எடுப்பது கிடையாது.

இதனால், பலமுறை கும்பகோணம் சாலையில் விபத்துக்கள் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில், தஞ்சாவூர் இருந்து கும்பகோணம் நோக்கி டி.வி.எம்., செந்தில் என்ற இரண்டு தனியார் பஸ்கள் நேற்றுமுன்தினம் போட்டி போட்டுக் கொண்டு சென்றுக்கொண் இருந்தன. அப்போது அம்மாபேட்டை வளைவில் அரசு டவுன் பஸ் ஒன்று சென்றுக்கொண்டு இருந்தது. அதன் பின்னால் சென்ற செந்தில் என்ற தனியார் பஸ் முந்த முயன்றது. அப்போது சாலையில் ஓரத்தில் இடமில்லாததால் நிலை தடுமாறி அதிவேகமாக வந்த டி.வி.எம்.,பஸ் முந்திச் சென்றது. இதில், கும்பகோணத்தில் இருந்து வந்த கார் மீது மோததால் அதிர்ஷ்டவசமாக,

அதில் வந்தவர்கள் உயிர் தப்பினர். இதனால் பயணிகள் கூச்சலிட்டனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பகீரை கிளம்பியது. இது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில், கும்பகோணம் தாலுக்கா போலீசார், அந்த இரண்டு தனியார் பஸ்களை பறிமுதல் செய்தனர். மேலும் செந்தில் பஸ் டிரைவரான சோழிய விளாகம் பகுதியை சேர்ந்த ராஜேஷ்கண்ணண்,42 கண்டக்டரான சோழபுரம் பகுதியை,

சேர்ந்த சுதாகர்,42, டி.வி.எம்., பஸ் டிரைவரான தஞ்சாவூர், வடக்குப்பட்டு பகுதியை சேர்ந்த ராஜ்குமார்,39, கண்டக்டரான திருவாலாம்பொழிலைச் சேர்ந்த ராஜதுரை,36, ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, அவர்களின் லைசன்ஸ்களையும் ரத்து செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story