தேர்தல் நடத்தை விதி முடிவுக்கு வந்தும் திறக்காத உத்திரமேரூர் எம்.எல்.ஏ., அலுவலகம்

தேர்தல் நடத்தை விதி முடிவுக்கு வந்தும் திறக்காத உத்திரமேரூர் எம்.எல்.ஏ., அலுவலகம்
X

உத்திரமேரூர் எம்.எல்.ஏ., அலுவலகம்

பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறும் வகையில், உத்திரமேரூர் எம்.எல்.ஏ., அலுவலகத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான மார்ச் 16ம் தேதியில் இருந்தே, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து தேர்தல் அதிகாரிகள், உத்திரமேரூரில் உள்ள தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் அலுவலகத்தை பூட்டி, சீல் வைத்தனர். இந்நிலையில், லோக்சபா தேர்தல் முடிவு கடந்த 4ம் தேதி முடிவு வெளியானது. இரு நாட்களுக்குப்பின் லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டு, மூன்று வாரங்களுக்கு மேலாகியும், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட 'சீல்' அகற்றப்பட்டு, அலுவலகம் திறக்கப்படவில்லை. இதனால், தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து கோரிக்கை மனு அளிக்க உத்திரமேரூர் எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். மேலும், எம்.எல்.ஏ., அலுவலக வளாகத்தில், செடி, கொடிகள் புதர்போல மண்டியுள்ளது. எனவே, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறும் வகையில், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., அலுவலகத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. "

Tags

Next Story