கருங்கல் அருகே நீதிமன்ற உத்தரவுப்படி கல்குவாரியில் ஆட்சியர் ஆய்வு

கருங்கல் அருகே நீதிமன்ற உத்தரவுப்படி கல்குவாரியில் ஆட்சியர் ஆய்வு

ஆய்வு செய்த ஆட்சியர் 

கருங்கல் அருகே சுனைபாறை பகுதியில் கல்குவாரியில் மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுடன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

கருங்கல் அருகே சுனைப்பாறை என்ற இடத்தில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது.நான்கு பஞ்சாயத்துகளின் எல்லை பகுதியில் இது அமைந்துள்ளது.இந்த கல்குவாரி விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.

மேலும் அதிக அளவில் வெடிமருந்து பயன்படுத்தி பாறைகள் உடைப்பதால் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.பாறை தூசுக்கள் பொதுமக்களுக்கு சுவாச கோளாறு உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்துவதாகவும் கூறிவந்த நிலையில் பொதுமக்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ட்ரோன் கேமரா மூலம் வீடியோ பதிவு செய்ய உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இன்று அந்த கல்குவாரியில் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்து ட்ரோன் மூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story