"மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்படும்" - அமைச்சர் முத்துசாமி உறுதி..!

மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் -  அமைச்சர் முத்துசாமி உறுதி..!

மகளிருக்கு அமைச்சர் முத்துச்சாமி கடனுதவி

தமிழகத்தில் உள்ள அரசு மதுபானக் கடைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்படும் என மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு குமலன்குட்டையில் மேம்படுத்தப்பட்ட பூமாலை வணிக வளாகத்தை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அவர் கடனுதவிகளை வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, "மதுபானக்கடைகளை படிப்படியாக குறைப்போம். இதுவரை 500 கடைகள் மூடப்பட்டுள்ளன. மதுபானக்கடைகளை யாருக்கும் நடத்த விருப்பமில்லை. அதேநேரத்தில் அவற்றை உடனடியாக மூடவும் முடியாது. மதுக்கடைகளை படிப்படியாக மூட வேண்டும். அதேபோல் குடிப்பவர்களுக்கு கவுன்சிலிங் தர வேண்டும்." என்றார். தமிழகத்தில் சர்ச்சைக்குரிய 40 இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள்மீது புகார் வந்துள்ளதாகக் கூறிய அமைச்சர் முத்துச்சாமி, அவற்றை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

Tags

Next Story