திருப்புபனத்தில் அஜித் லாக் அப் மரணத்திற்கு நீதி கேட்டு அதிமுக - பாஜக ஆர்ப்பாட்டம்!!

திருப்புபனத்தில் அஜித் லாக் அப் மரணத்திற்கு நீதி கேட்டு அதிமுக - பாஜக ஆர்ப்பாட்டம்!!
X

admk and bjp

திருப்புவனத்தை சேர்ந்த இளைஞர் அஜித்குமாரின் காவல்நிலைய மரணத்திற்கு நீதி கேட்டு இன்று காலை 10 மணிக்கு அதிமுகவினர் மற்றும் பாஜகவினர் இணைந்து, சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.

திருப்புவனத்தை சேர்ந்த இளைஞர் அஜித்குமாரின் காவல்நிலைய மரணத்திற்கு நீதி கேட்டு இன்று காலை 10 மணிக்கு அதிமுகவினர் மற்றும் பாஜகவினர் இணைந்து, சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பிரசித்திபெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார்(27) என்ற இளைஞர். கடந்த ஜூன் 27 அன்று இந்தக் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி (73) , அவரது மகள் நிக்கிதாவின் காரில் வைக்கப்பட்டிந்த 10 சவரன் நகைகள் காணாமல் போனது. இதுதொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், போலீஸாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் பரிதாபமாக உயிரிழந்தார். கோவிலுக்கு பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டகையில் வைத்து போலீஸார், அஜித்தை தாக்கும் வீடியோ காண்போரை கலங்கச் செய்கிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், திருப்புவனம் காவல்நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் காவலர்கள் கண்ணன், பிரபு, சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டதை தொடர்ந்து, 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு 15 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இளைஞர் அஜித் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இந்நிலையில் சிவகங்கை எஸ்.பி., ஆஷிஸ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ராமநாதபுரம் எஸ்.பி., சந்தேஷுக்கு சிவகங்கை எஸ்.பி.,யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கு மாற்றப்பட்டதுடன் உடனடியாக சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். தொடர்ந்து மானாமதுரை டி.எஸ்.பி. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இளைஞரின் லாக் அப் மரணத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அஜித் குமாரின் காவல்நிலைய மரணத்திற்கு நீதி கேட்டு இன்று காலை 10 மணிக்கு அதிமுகவினர் மற்றும் பாஜகவினர் இணைந்து, சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

Tags

Next Story