பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் உயிரிழந்தோருக்கு உரிய இழப்பீடு தருக: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் உயிரிழந்தோருக்கு உரிய இழப்பீடு தருக: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
X

EPS

பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் உயிரிழந்தோருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் உயிரிழந்தோருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து எடப்பாடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; “கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளாகியதில் 2 மாணவர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க, உரிய நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்துகிறேன். காயமடைந்த அனைவரும் பூரண உடல் நலன் பெற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளர்.

Next Story