மோடி, அமித்ஷாவுக்கு பின் எம்ஜிஆர், ஜெ: செங்கோட்டையன் பரபரப்பு அறிக்கை!!

மோடி, அமித்ஷாவுக்கு பின் எம்ஜிஆர், ஜெ: செங்கோட்டையன் பரபரப்பு அறிக்கை!!
X

 Sengottaiyan

பிரதமர் மற்றும் அமித்ஷாவை புகழ்ந்து செங்கோட்டையன் அறிக்கை வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு பின் MGR, ஜெயலலிதா பெயரை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் செங்கோட்டையன். செங்கோட்டையனை பாஜக இயக்குவதாக எழுந்து வரும் தொடர் விமர்சனங்களுக்கு மத்தியில் பிரதமர் மற்றும் அமித்ஷாவை புகழ்ந்து செங்கோட்டையன் அறிக்கை வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்றைய உலக தலைவர்களில் முதன்மையானவராக திகழும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களாலும், இந்திய திருநாட்டின் இன்றைய இரும்பு மனிதராக திகழும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களாலும் முன்மொழியபட்டவரும், இதயதெய்வம் புரட்சித்தலைவர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் அன்பை பெற்றவரும், நம் தமிழ்தேசத்தின் தனிபெரும் தலைவர் மேதகு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் வேற்றுமையில் ஒற்றுமை காணும் பாரத திருநாட்டின் துணை குடியரசு தலைவராக தேர்வு பெற்று உள்ளது இந்நாட்டின் பொன்னேட்டில் எழுதப்படும் திருநாள் ஆகும். தன் பணிகாலத்தில் இந்திய தேசத்தை உயரத்திற்கு எடுத்து செல்ல மனம்கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story