விஜய் பரப்புரைக்கு நாங்கள் ஏன் இடையூறு செய்ய போகிறோம்?: கே.என்.நேரு

விஜய் பரப்புரைக்கு நாங்கள் ஏன் இடையூறு செய்ய போகிறோம்?: கே.என்.நேரு
X

K.N.Nehru 

தவெகவுக்கு இடையூறு தந்து நாங்கள் என்ன செய்யப் போகிறோம்? எந்த கட்சியாக இருந்தாலும் மக்களுக்கு இடையூறு ஏற்படாத இடமாகப் பார்த்துதான் பரப்புரை செய்ய காவல்துறை அனுமதி கொடுக்கிறது என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “திருச்சி மரக்கடையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரப்புரைக்கு அவர்கள் கேட்ட இடத்தை கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எங்களுக்கு அதிமுக ஆட்சியில் சிந்தாமணி அண்ணா சிலை கொடுக்கவில்லை. பல இடங்களில் அதிமுக ஆளுங்கட்சியா இருக்கும் போது அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. நாங்கள் எதிர்க்கட்சியா இருக்கும் பொழுது எங்களுக்கு அந்த இடத்தை கொடுக்கவில்லை. அப்போது திருச்சி மாவட்ட ஆட்சியரிடமும் காவல்துறை உயர் அதிகாரிகளிடமும் குறிப்பிட்ட இடங்களை அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்துவதற்காக ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அதன் பின் குறிப்பிட்ட இடங்கள் பிரச்சாரம் செய்வதற்காக ஒதுக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் இடங்களில் எந்த இடத்தையும் ஆளுங்கட்சியாக இருந்தால் எதிர்க்கட்சியாக இருந்தாலும் காவல்த்துறை அனுமதி அளிப்பது கிடையாது, நாங்கள் ஏன் த.வெ.கவினர் பிரச்சாரத்திற்க்கு இடையூறு செய்து என்ன செய்யப் போகிறோம்?” எனக் கேள்வி எழுப்பினார்.

Next Story