நிபந்தனையை மீறினால் பிரச்சாரம் பாதியில் நிறுத்தப்படும்: விஜய்க்கு காவல்துறை எச்சரிக்கை

நிபந்தனையை மீறினால் பிரச்சாரம் பாதியில் நிறுத்தப்படும்: விஜய்க்கு காவல்துறை எச்சரிக்கை
X

Vijay

திருச்சி மரக்கடையில் காலை 10.35 முதல் 11 மணி வரையே விஜய் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 23 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

திருச்சி மரக்கடையில் காலை 10.35 முதல் 11 மணி வரையே விஜய் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 23 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. திருச்சியில் வரும் சனிக்கிழமை நடைபெறும் விஜய்யின் பிரச்சாரத்திற்கு காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதியளித்துள்ளது. தவெக தலைவர் விஜய்-யின் பிரச்சாரத்திற்கு 23 நிபந்தனைகள் விதித்துள்ளது திருச்சி காவல்துறை. அதன்படி, திருச்சி மரக்கடையில் காலை 10.35 முதல் 11 மணி வரையே விஜய் பிரச்சாரம் செய்ய வேண்டும், விஜய்யின் வாகனத்திற்கு பின்னால் 5 வாகனங்களுக்கு மேல் எந்தவொரு வாகனமும் அனுமதிக்கப்படாது, விஜய் வாகனத்தின் முன்னும் பின்னும் தொண்டர்கள் பைக், 4 சக்கர வாகனங்களில் ஊர்வலமாக வரக்கூடாது, பரப்புரையின் போது வரக்கூடிய வாகனங்களுக்கான பார்க்கிங் வசதிகளை தவெகவினரே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும், கர்ப்பிணிகள், குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் வருவதை தவிர்த்திட வேண்டும். பிரச்சாரம் செய்யும் விஜய், ரோடு ஷோ செல்லக்கூடாது, வாகனத்தில் அமர்ந்தபடியே வர வேண்டும், திருச்சி டிவிஎஸ், டோல்கேட்டில் இருந்து மரக்கடை வந்து பிரச்சாரத்தை முடித்துவிட்டு, திருவெறும்பூர் நெடுஞ்சாலையில் செல்லவேண்டும், பிரச்சாரத்தில் விஜய் 20 முதல் 25 நிமிடங்கள் மட்டுமே உரையாற்ற வேண்டும், விஜய்யின் பிரச்சாரத்தின்போது சட்டம், ஒழுங்கு பிரச்சனை வரக்கூடாது. பொதுமக்கள், வியாபார்களுக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படுத்தக்கூடாது, விதிமுறைகளை மீறினால் பிரச்சாரம் பாதியில் நிறுத்தப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Next Story