கூட்டணி கட்சிக்காரர்கள் உஷாரா இருங்க..! தேர்தல் வருவதற்குள் திமுக உங்களை விழுங்கிவிடும்: எடப்பாடி

edapadi palanisamy
கோவையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அதிமுக நான்காக போனது மூன்றாக போனது என சொன்னார்கள். எல்லாம் ஒன்றாக இருக்கின்றது. 2026 சட்டமன்ற தேர்தலில் காண்பிப்போம். இப்படி சொல்லி சொல்லி தான் தொலைக்காட்சிகளில் அவதூறு பரப்பி வருகிறீங்க. ஸ்டாலின் எப்போது பேசினாலும் குறிப்பிடுகிறார். திமுக தலைமையில் பல கட்சிகள் கூட்டணியில் இருக்கின்றன. எங்களுக்கு கூட்டணி பலம் இருக்கிறதாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அதிமுக கூட்டணி பொறுத்தவரை மக்களை நம்பி இருக்கிறது. மக்கள் தான் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என முடிவு செய்வார்கள். அதனை மறந்துவிட்டு ஸ்டாலின் எப்போதும் கூட்டணி தான் எங்களை வாழ வைப்பது போல நிணைத்துக்கொண்டு இருக்கிறார். ஆனால் மக்கள் அந்த நிலையில் இல்லை. மீண்டும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றனர். மேலும் திமுக கொள்கை தான் எல்லா கூட்டணி கட்சிக்கும் இருக்கிறதாம். அப்போது எல்லாம் ஒரே கட்சியாக இருந்திருக்கலாமே. எதற்கு தனித்தனி கட்சியாக வைத்திருக்கிறீர்கள். ஒவ்வொறு கட்சிக்கு ஒவ்வொரு கொள்கை இருக்கிறது. திமுக தலைவர் சொல்கிறார் ஒரே கொள்கை உடைய கட்சிகள் எல்லாம் ஒன்றாக இருக்கின்றன என்றால் எல்லாம் திமுக-விற்கு சென்றுவிடலாம். தனித்தனி கட்சி நடத்த வேண்டிய அவசியமே இல்லை. அதிமுகவை பொருத்தவரை கொள்கை வேறு, கூட்டணி வேறு. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் அமைக்கப்படுவது. கொள்கை என்பது நிலையானது. அந்த கொள்கை அடிப்படையில் தான் கட்சி செயல்படும். ஆனால் திமுக அப்படி அல்ல. கூட்டணி கட்சிகளை ஏமாற்றி அதனை விழுங்கிக்கொண்டு இருக்கிறார் ஸ்டாலின். கூட்டணி கட்சிக்காரர்கள் உஷாராக இருந்தால் உங்கள் கட்சிகளை காப்பாற்றிக்கொள்ளலாம். தேர்தல் வருவதற்குள் திமுக உங்களை விழுங்கிவிடும். மேலும் எடப்பாடி பழனிசாமி வேனும் என்றே கூட்டணியை உடைப்பதற்காக பேசுகிறார் என சொல்கிறார்கள். நாங்கள் யாரும் உங்கள் கூட்டணியை உடைக்க வேண்டிய அவசியம் இல்லை நீங்களே உடைந்து விடுவீர்கள். திமுக கூட்டணியில் முரண்பாடு உள்ளது. தேர்தல் வரை அந்த கூட்டணி எல்லாம் தாங்குமா தாக்கு பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.