நாளை பரப்புரையை தொடங்கும் விஜய்!!

நாளை பரப்புரையை தொடங்கும் விஜய்!!
X

Vijay

திருச்சியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை பரப்புரையை தொடங்க உள்ளார்.

நாளை காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் புறப்பட்டுச் செல்கிறார். மேலும் நாளை காலை 10:30 மணி முதல் 11 மணி வரை திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை முன் மக்கள் மத்தியில் விஜய் தேர்தல் பரப்புரையைத் தொடங்க உள்ளார். குறிப்பாக இந்தப் பிரச்சாரக் குழுக் கூட்டத்தில் விஜய் 15 நிமிடங்கள் மட்டுமே பேச உள்ளதாகக் கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி சனிக்கிழமை நாட்களில் மட்டும் மட்டும்தான் விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள பிரத்தேயக வாகனம் வடிவமைக்கப்பட்டு பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழகத் தலைமை அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் , அந்த வாகனத்தில் '’உங்கள் விஜய் நா வரேன்" என்ற வாசகங்கள் இடம்பெற்று உள்ளது. மேலும் இந்த பரப்புரைக்கு மக்களுடன் விஜய் சந்திப்பு என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்தப் பயணம், மக்கள் குறைகளை நேரடியாக அறிந்து கொள்ளும் நோக்கத்துடன், கட்சியின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் சுற்றுப்பயணத்தின் போது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, சில முக்கியமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள், மற்றும் மாற்றுத் திறனாளிகள் இச் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்கள். பயணம் ஒரே ஒரு திட்டமிடப்பட்ட வழித்தடத்தின்படி மட்டுமே நடைபெற வேண்டும். சுகாதார வசதிகள், தண்ணீர், உணவு போன்ற அடிப்படை ஏற்பாடுகள் முன்னேற்பாடாக செய்யப்பட்டுள்ளது.

Next Story