தவெக லோகோ வெளியானது!!

tvk vijay
தமிழகம் தழுவிய சுற்றுப் பயணத்தை அறிவித்துள்ளார் விஜய். அவரின் சுற்றுப் பயணத்தை ஆவலோடு எதிர்பார்த்த தவெக தொண்டர்கள், பயணத் திட்டத்தை பார்த்து வாயடைத்து போயிருக்கிறார்கள். ஏனென்றால், தமிழகத்தில் இதுவரை அரசியல் தலைவர்கள் திட்டமிட்ட சுற்றுப் பயணங்கள் என்பது, தொடர்ச்சியானதாக இருக்கும். அல்லது சில கட்டங்களாக பிரிக்கப்பட்டு திட்டமிடப்படும். ஆனால், விஜய்யின் சுற்றுப் பயணம் செப்டம்பர் 13-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ஆம் தேதி முடிவடைகிறது. கிட்டத்திட்ட மூன்றரை மாதங்கள் உள்ள இந்த காலகட்டத்தில், விஜய்யின் பயணம் வெறும் 16 நாட்கள்தான். அதிலும், ஒவ்வொரு வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை மட்டும்தான் பயணத்தை திட்டமிட்டுள்ளார் விஜய். ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு செல்லும் வகையில் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. விஜய் தொகுதி வாரியாக வருவார், வீதி வீதியாக வருவார் என்றெல்லாம் முதலில் தகவல்கள் கசிந்தன. ‘டிரஸ் கோடு’ உட்பட விஜய் கிட்டத்திட்ட ஜெகன் மோகன் ரெட்டியை பின்பற்றுவதால், அவரைப் போல மாநிலம் தழுவிய நடைபயணம் மேற்கொள்வார் என்றெல்லாம் தொண்டர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் நாளை திருச்சியில் இருந்துதேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடங்குகிறார். இதற்காக விஜய் பிரச்சாரம் செய்ய பிரத்யேக பேருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுப்பயணத்திற்கான லோகோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் அண்ணா ஆட்சி அமைத்த 1967, எம்ஜிஆர் ஆட்சி அமைத்த 1977 மற்றும் 2026 என குறிப்பிடப்பட்டுள்ளது.