ஈபிஎஸ்க்கு பிரமாண்ட கூட்டம் கூடுது! இனி கூட்டு பிரச்சாரம்: அண்ணாமலை

Annamalai
சென்னையில் நடைபெற்ற பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் பாஜக தொண்டர்கள் எழுச்சியாக பங்கேற்று வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தில் எதிர்பார்த்ததைவிட பிரமாண்டமாக கூட்டம் கூடுகிறது. சுற்றுப்பயணத்தின்போது பாஜகவை பாராட்டும் வகையில் ஈபிஎஸ் பேசுகிறார். 2017 முதல் 4 ஆண்டுகள் அதிமுகவின் ஆட்சியை பாஜக காப்பாற்றியது என ஈபிஎஸ் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் இணைந்து கூட்டு பிரச்சாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம். அக்டோபர் முதல் வாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளார். இனி என்.டி.ஏ. தலைவர்கள் கூட்டாக பிரச்சாரம் செய்வர். ஈபிஎஸ் பேச்சு பாஜகவை பாராட்டும் வகையில் உள்ளது” என்றார்.