எடப்பாடியுடன் கூட்டணி வைப்பது தூக்கில் தொங்குவதற்கு சமம்: டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்
தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “எடப்பாடி பா.ஜ.க விற்கு நன்றி செலுத்த கூட்டணி வைத்துள்ளதாக கூறிவது சாத்தான் வேதம் ஒதுவதுதான். எடப்பாடியை காப்பாற்றியது பா.ஜ.க அல்ல, கூவத்தூரில் தங்கவைக்கப்பட்ட 122 எம்.எல்.ஏக்கள் தான். எடப்பாடி பொய் சொல்கிறார், பொய்மூட்டை பழனிசாமி. 2026 தேர்தலில் தமிழக மக்கள் பழனிசாமியை உறுதியாக புறக்கணிப்பார்கள். இரட்டை இலையையும் பணப் பலத்தையும் வைத்து டெல்லியுடன் கூட்டணி வைத்துள்ள எடப்பாடிக்கு உள்ள 20 சதவிகித வாக்கு 10 சதவிகிதமாக குறைந்துவிடும். அ.ம.மு.க எடப்பாடியுடன் கூட்டணியில் சேர சான்ஸ்லே இல்லை. யூடியூப் சேனல்கள் பொய்யான தகவல்களை பரப்புகின்றனர். நன்றியை பத்தி பேசுவதற்கு எடப்பாடிக்கு தகுதி இல்லை. எல்லா பிரச்னைக்கும் பழனிசாமி தான் காரணம். நயினார் நாகேந்திரன் மாற்றி மாற்றி பேசுகிறார். நான் ஒருபோதும் பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மாட்டேன். நயினார் நாகேந்திரனிடம் நான் அப்படி பேசவில்லை. 2026 பிறகு எடப்பாடி நடுத்தெருவில் நிற்பார்” என்றார்.