திமுகவுடன் கூட்டணி மட்டுமல்ல, அதையும் தாண்டி புனிதமானது: கமல்ஹாசன்

திமுகவுடன் கூட்டணி மட்டுமல்ல, அதையும் தாண்டி புனிதமானது: கமல்ஹாசன்
X

kamal

திமுகவுடன் கூட்டணி மட்டுமல்ல, அதையும் தாண்டி புனிதமானது என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

2026 தமிழ்நாடு, புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் தொடர்பாக மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொண்டார். நிர்வாகிகள் மத்தியில் பேசிய மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், “திமுகவில் சேர்ந்துவிட்டதாக சொல்கிறார்கள். திமுக உடன் மக்கள் நீதி மய்யம் வைத்திருப்பது வெறும் கூட்டணி அல்ல, அதையும் தாண்டி புனிதமானது. நீதிக்கட்சியில் இருந்து திமுக வந்தது, மக்கள் நீதி மய்யத்திலும் நீதி உள்ளது. ஆசியாவின் முதல் மய்யவாத கட்சி மக்கள் நீதி மய்யம் தான். நாட்டை இடது, வலது என பிரிப்பதை அனுமதிக்கக்கூடாது. என்னை பார்ப்பனார் என அடையாளம் காட்ட சிலர் முயற்சிக்கின்றனர். சாதி என்பதே எனக்கு ஒரு இடையூறுதான். நான் யார் என்பது, என் நடவடிக்கையிலேயே தெரியும். வாக்கு திருட்டு தொடர்பான ராகுல்காந்தியின் புகாரில் உண்மையில்லை என்றால் தேர்தல் ஆணையம் அதனை நிரூபிக்க வேண்டும்” என்றார்.

Next Story