அதிமுகவில் இருந்து என்னை நீக்கினாலும் மகிழ்ச்சிதான்: செங்கோட்டையன்

அதிமுகவில் இருந்து என்னை நீக்கினாலும் மகிழ்ச்சிதான்: செங்கோட்டையன்
X
அதிமுகவில் இருந்து என்னை நீக்கினாலும் மகிழ்ச்சிதான் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி முன்னிட்டு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் சேர்ந்து ஒன்றாக பங்கேற்று, தேவர் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். ஓ.பன்னீர்செல்வம் கூறும்போது, “தேவரின் புகழ் நாடு உள்ளவரை நிலைத்து நிற்கும். அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதற்காக நல்லெண்ணத்தோடு, நம்பிக்கையோடு தேவரின் நினைவிடத்தில் சபதம் ஏற்றுக்கொண்டு அனைவரும் ஒருங்கிணைந்து நின்றுள்ளோம். மீண்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் நிறுவ வேண்டும் என சபதம் எடுத்து உள்ளோம்”் என்றார். தொடர்ந்து டிடிவி தினகரன் கூறுகையில், ” துரோகத்தை வீழ்த்தும் வரை அ.ம.மு.க. ஓயாது. இதுதான் எங்கள் நிலைப்பாடு. தமிழ்நாட்டிலே துரோகம் வீழ்த்தப்பட வேண்டும். உண்மையான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை உருவாக்குவது தான் எங்களது முதல் குறிக்கோள். அ.தி.மு.க. எங்களுக்கு எதிரி இல்லை. எடப்பாடி பழனிசாமிதான் எங்களுக்கு எதிரி. 50 ஆண்டுகளாக தென்மாவட்ட மக்களின் கோரிக்கையாகிய தேவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்பது எங்களுடைய தேர்தல் வாக்குறுதியிலேயே இருக்கிறது என்று அவர் கூறினார். செங்கோட்டையன் கூறுகையில், எம்.ஜி.ஆர். எங்களுக்கெல்லாம் வழிகாட்டி. எங்களை வாழ வைத்தவர் ஜெயலலிதா. திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்துவதற்காகத்தான் அனைவரும் ஒன்றிணைவோம் என்று குரல் கொடுத்தேன். அது இன்று நிறைவேறி இருக்கிறது என்றார். இந்த நிலையில், செங்கோட்டையன் மீது நடவடிக்கை பாயுமா என்று எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவுக்கு யார் துரோகம் செய்தாலும், யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இது தொடர்பாக செங்கோட்டையன் கூறுகையில் , அதிமுகவில் இருந்து என்னை நீக்கினால் மகிழ்ச்சிதான். அடுத்தகட்ட ஆலோசனையில் ஈடுபட்டு அதுகுறித்து தெரிவிப்பேன்” என்றார்.

Next Story