செங்கோட்டையன் திமுகவின் பி டீம்: ஈபிஎஸ்

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “திமுகவை ஆட்சியில் அமர்த்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விரும்புகிறார்கள். 2026 தேர்தலில் திமுகவுக்கு பி- டீமாக செயல்படுவதுதான் அவர்களின் விருப்பம். அதிமுக தலைமைக்கு விரோதமாகச் செயல்பட்டாலும் கட்சியை பலவீனப்படுத்த நினைத்தாலும், கட்சி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது. சட்டவிதிகளின்படியே செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார். செங்கோட்டையனுக்கு அமைச்சர் பதவியை வழங்கியவன் நான். அத்திக்கடவு-அவினாசி திட்ட பாராட்டு விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. செங்கோட்டையன் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை. கடந்த 6 மாதங்களாக கட்சிக்கு எதிராக செங்கோட்டையன் செயல்பட்டார். அவர் திமுகவின் 'B' டீம் தான். பொதுக்குழு தீர்மானத்தை மீறி செங்கோட்டையன் செயல்பட்டார். இதனால் தான் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்பவர்கள்.. அவர்களுக்கும் விசுவாசமாக இல்லை, கட்சிக்கும் விசுவாசமாக இல்லை.. துரோக செயல்களில் ஈடுபட்டவர்களை தான் கட்சியிலிருந்து நீக்கியுள்ளோம்” என்றார்.
