செங்கோட்டையன் அப்போதே பி-டீம் வேலையை ஆரம்பித்துவிட்டார்: எடப்பாடி பழனிசாமி

செங்கோட்டையன் அப்போதே பி-டீம் வேலையை ஆரம்பித்துவிட்டார்: எடப்பாடி பழனிசாமி
X
செங்கோட்டையன் அப்போதே பி-டீம் வேலையை ஆரம்பித்துவிட்டார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், செங்கோட்டையன் திமுகவின் பி டீமாக செயல்பட்டார். கட்சி விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்த செங்கோட்டையன் ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை என தவறான கருத்தை கூறினார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதை விளக்கியபோது அவர் ஏற்கவில்லை. ஆனால், சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் செங்கோட்டையன் பங்கேற்றார். அதுதொடர்பான பேனர்களில் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா படங்கள் இடம்பெறவில்லை. கருணாநிதி , முக ஸ்டாலின் படங்கள் தான் இருந்துள்ளன. அப்போதே அவர் பி-டீம் வேலையை ஆரம்பித்துவிட்டார். செங்கோட்டையன் கடந்த 6 மாதமாக கட்சிக்கு எதிராக தான் இருந்தார். செங்கோட்டையன் குறிப்பிடுபவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், பிரிந்து சென்றவர்கள் அல்ல. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் இணைந்து செயல்பட்டதால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்சிக்கு துரோகம் செய்தால் இதுதான் நிலைமை.பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றி கட்சியை விட்டு நீக்கியவர்களோடு தொடர்பு வைத்திருந்தால், நீக்காமல் என்ன செய்வார்கள்?. அதிமுக தலைமைக்கு எதிராக செயல்பட்டால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம்.அதிமுகவைப் பற்றி பேச டிடிவி தினகரனுக்கு எந்த தகுதியும் இல்லை. திமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர செங்கோட்டையன், டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம் திட்டமிட்டுள்ளனர். ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு அதிமுக குறித்து பேச தகுதி இல்லை. சட்டப்பேரவையில் திமுகவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட செங்கோட்டையன் பேசியதில்லை என தெரிவித்துள்ளார்.

Next Story