செங்கோட்டையன் பின்னணியில் திமுக உள்ளதோ என சந்தேகம்: நயினார் நாகேந்திரன்

செங்கோட்டையன் பின்னணியில் திமுக உள்ளதோ என சந்தேகம்: நயினார் நாகேந்திரன்
X

Nainar Nagendran

செங்கோட்டையன் விவகாரத்தில் திமுக பின்னணியில் உள்ளதோ என சந்தேகம் எழுந்துள்ளது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த தொட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற வந்தேமாதரம் 150வது ஆண்டு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுடன் வந்தேமாதரம் பாடும் நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அண்ணன் செங்கோட்டையன் கொடுத்த பேட்டியை பார்த்தேன். அதில் சரியான தகவல் இல்லை. செங்கோட்டையன் பாஜகவில் யாரை பார்த்தார். என்ன பேசினார்? 6 பேர் சென்றதாக சொன்னார்... அந்த 6 பேர் யார்? என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. செங்கோட்டையன் விவகாரத்தில் திமுக பின்னணியில் உள்ளதோ என சந்தேகம் எழுந்துள்ளது. நேற்று முன்தினம் மனோஜ் பாண்டியன் கூட திமுகவில் இணைந்துள்ளார்” என்றார். முதல்வர் ஸ்டாலின், விஜய் இருவரின் தொண்டர்கள் யார் தளபதி என்பதில் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்கிறார்களே என்ற கேள்விக்கு இது தமிழகத்தின் தலைவிதி என தெரிவித்தார்.

Next Story