திருத்தணியில் 14ம்தேதி அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ்

திருத்தணியில் 14ம்தேதி அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ்
X

EPS

திருத்தணியில் 14ம்தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருத்தணி தொகுதி வாழ் மக்களின் அத்தியாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தரவும், மக்களின் அடிப்படைத் தேவைகளையும், நலன் பயக்கும் திட்டங்களையும் உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருவள்ளூர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: 14.7.2025, திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறும். திருவள்ளூர் மேற்கு மாவட்டம், திருத்தணி சட்டமன்றத் தொகுதியில் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால், அப்பகுதிவாழ் மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. பல்வேறு பிரச்சினைகளால் மக்கள் மிகுந்த வேதனைக்கு ஆட்பட்டுள்ளனர். மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல் இருந்து வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தலைமையிலும்; கழக அமைப்புச் செயலாளரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளருமான திருத்தணி அரி, திருவள்ளூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ரமணா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், நகர, பேரூராட்சி மன்ற முன்னாள் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story