அதிமுக ஆட்சியில் 2 முறை விவசாய கடன் தள்ளுபடி; மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இதை கண்டிப்பா செய்வோம்: ஈபிஎஸ்

அதிமுக ஆட்சியில் 2 முறை விவசாய கடன் தள்ளுபடி; மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இதை கண்டிப்பா செய்வோம்: ஈபிஎஸ்
X

EPS

இரண்டு முறை விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி செய்த அரசு அதிமுக அரசு என எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம் தெரிவித்தார்.

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழக முன்னாள் முதலமைச்சர் அதிமுக பொதுச் செயலாளர் ஆன எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஏழாம் தேதி கோயம்புத்தூரில் தொடங்கி தினந்தோறும் மூன்று சட்டமன்ற தொகுதிகளின் மக்களை சந்தித்து பரப்புரை செய்து வருகிறார். இதன் அடிப்படைகள் இன்று அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள எடப்பாடி பழனிச்சாமி தனியார் தங்கும் விடுதியில் காமராஜரின் 123 வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அரியலூர் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் விவசாய சங்க பிரதிநிதிகளை நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கையை கேட்டறிந்தார். கொள்ளிட ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்ட வேண்டும். சிறப்பு குருவை தொகுப்பு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். நெல் கரும்பு முந்திரிக்கு உரிய விலை நிர்ணயித்து விவசாயத்தை காக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர். பின்னர் விவசாயிகளின் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “தமிழகத்தில் இரண்டு முறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மூலம் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்த பெருமை அதிமுகவை சேரும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் ஒரு முறையும், தனது ஆட்சி காலத்தில் ஒரு முறையும் என இரு முறை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம். இது போன்று குடிமராமத்து பணிகள் மூலம் தமிழகத்தில் மிகப்பெரிய சுமார் 14,000 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளது. இதனால் மழைநீர் முழுவதும் சேகரிக்கப்பட்ட விவசாயிகள் பயன்பெற்றனர். இந்த ஏரிகளின் இருந்து எடுக்கப்பட்ட வண்டல் மண் இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதால் விவசாய நிலங்கள் ஊட்டச்சத்து பெற்று விவசாயம் பன்மடங்கு பெருகியது. இதுவும் அதிமுக ஆட்சியின் சாதனை. சேலத்தில் தனது ஆட்சி காலத்தில் சுமார் 1000 ஏக்கரில் உருவாக்கப்பட்ட கால்நடை பண்ணையை மீண்டும் அந்த திமுக அரசு மூடிவிட்டது. இது விவசாயிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. உங்களின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த கால்நடை பண்ணை மீண்டும் செயல்படுத்தப்பட்டு இங்கு உருவாக்கப்படும் சிறந்த கலப்பின பசுக்கள் இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும், இதன் மூலம் விவசாயிகள் வளர்ச்சி அடைவார்கள். திமுக அரசு எத்தனை தேர்தல் வாக்குறுதிகள் அறிவித்தபடி கரும்பு டன் ஒன்றுக்கு நான்காயிரம் ரூபாயும் நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2500 ரூபாயும் தரவில்லை. பலமுறை சட்டமன்றத்தில் நான் கோரிக்கை வைத்தும் திமுக அரசு வழங்கவில்லை. உங்களின் ஆதரவுடன் அதிமுக அரசு அமைந்த உடன் உங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்” என்றார்.

Next Story