ஜனவரி 2-ந்தேதி முதல் நடை பயணம் : வைகோ

வைகோ
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மது விலக்கை வலியுறுத்தி ஜனவரி 2-ந்தேதி முதல் நடை பயணம் மேற்கொள்ள இருக்கிறோம். நடை பயணத்தில் என்னுடன் பங்கேற்பவர்களுக்கு பிரத்யேக சீருடை வழங்கப்படும். கடந்த காலங்களில் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் நடை பயணத்தை நாங்கள் நடத்தி இருக்கிறோம். அதேபோல் இந்த சமத்துவ நடை பயணமும் இருக்கும். மதுவின் பிடியில் இருந்து இளைய தலைமுறையினரை மீட்க வேண்டும். கோவையில் மாணவிக்கு நேர்ந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விஷயத்தில் போலீசார் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். நடைபயணம் நடக்கும் இடங்களில் பொதுக்கூட்டங்களில் நான் பேச இருக்கிறேன். கொள்கைகளுக்காக எப்போதும் குரல் கொடுப்பேன். மக்களுக்கு எதிரான நியூட்ரீனோ, ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்பன் போன்ற பல்வேறு திட்டங்களை நான் தடுத்து நிறுத்தியிருக்கிறேன். ஜனவரி 2-ந்தேதி திருச்சியில் தொடங்கும் நடைபயணத்தை மதுரையில் முடிக்க இருக்கிறோம் என்று அவர் கூறினார்.
