அதிமுகவில் இணைந்த 2 புதிய கட்சிகள்; அரசியலில் புதிய திருப்பம்!!

அதிமுகவில் இணைந்த 2 புதிய கட்சிகள்; அரசியலில் புதிய திருப்பம்!!
X
அதிமுகவில் 2 புதிய கட்சிகள் இணைந்துள்ளன.

தமிழகத்தில் 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிக் கணக்குகள் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் தங்களின் ஆதரவை மீண்டும் உறுதி செய்து வருகின்றன. அந்த வகையில், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கதிரவன், வரும் தேர்தலை அ.தி.மு.க தலைமையில் சந்திக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதேபோல், அ.தி.மு.க கூட்டணியில் நீடிப்பது குறித்துப் பல்வேறு யூகங்கள் எழுந்து வந்த நிலையில், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார். முன்னதாகப் பொதுக்குழுவிற்குப் பிறகு முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறியிருந்ததால் கூட்டணி மாற்றம் குறித்த பேச்சுகள் எழுந்தன. ஆனால், தற்போது அ.தி.மு.க கூட்டணியில் தொடர்வதை உறுதி செய்துள்ள அவர், தங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பே முதல் நடவடிக்கையாக இருக்கும் என்றும் சூளுரைத்துள்ளார்.

Next Story