திமுக ஆட்சியில் இதுவரை 25 லாக்அப் மரணங்கள் நிகழ்ந்துள்ளன: இபிஎஸ் அதிர்ச்சி தகவல்!!

திமுக ஆட்சியில் இதுவரை 25 லாக்அப் மரணங்கள் நிகழ்ந்துள்ளன: இபிஎஸ் அதிர்ச்சி தகவல்!!
X

EPS

திமுக ஆட்சியில் இதுவரை 25 லாக்கப் மரணங்கள் ஏற்பட்டுள்ளது எனவும், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் இந்த அரசு மிக மிக மோசமான சூழலில் உள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியில் இதுவரை 25 லாக்கப் மரணங்கள் ஏற்பட்டுள்ளது எனவும், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் இந்த அரசு மிக மிக மோசமான சூழலில் உள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.சேலத்தில் இருந்து விமானம் மூலமாக சென்னை விமான வந்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அஜித் குமார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியதின் காரணமாகத்தான் உடலில் பல காயங்கள் ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் என்னால் பதில் சொல்ல முடியாத இருந்த போதிலும், அஜித்குமார் கடுமையாக தாக்கி அவர் இறந்திருக்கிறார் என்பது கொலையாகத்தான் பார்க்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நீதிமன்றம் மூலம் உரைய தண்டனை கிடைக்கப்பெற வேண்டும். அஜித்குமாரின் கொலை மிக மிக வருத்தத்துக்குரியது வேதனைக்குரியது. தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் லாக்கப் மரணங்கள் இதுவரை 25 மரணங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. இது மிக வருத்தத்துக்குரியது. இந்த அரசாங்கம் சட்ட ஒழுங்கு பாதுகாப்பதிலே மிக மிக மோசமான சூழ்நிலையில் உள்ளது. அதுவும் காவல் மரணங்கள் வேதனைக்குரியது கண்டனத்துக்குரியது. ஒருவர் மீது வழக்கு தொடர வேண்டுமென்றால் எஃப் ஐ ஆர் பதிவு செய்து முறையாக செய்ய வேண்டும். ஆனால் அஜித்குமார் வழக்கில் எதுவும் பின்பற்றப்படவில்லை” என்றார்.

Tags

Next Story