திமுக கூட்டணியில் பாமக ராமதாஸ்?? ஈ.ஆா்.ஈஸ்வரன் மூலம் வலை விரித்த ஸ்டாலின்!!

திமுக கூட்டணியில் பாமக ராமதாஸ்?? ஈ.ஆா்.ஈஸ்வரன் மூலம் வலை விரித்த ஸ்டாலின்!!
X
திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில், பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலரும் திருச்செங்கோடு எம்எல்ஏவுமான ஈ.ஆா். ஈஸ்வரன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனா்.

திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில், பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலரும் திருச்செங்கோடு எம்எல்ஏவுமான ஈ.ஆா். ஈஸ்வரன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனா். தருமபுரி, சேலம் மாவட்டங்களில் நடைபெற்ற பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற ராமதாஸ், செவ்வாய்க்கிழமை தைலாபுரம் தோட்ட இல்லத்தில் ஓய்வில் இருந்தார். இந்த நிலையில், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலரும், எம்எல்ஏவுமான ஈ.ஆா். ஈஸ்வரன், நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் மற்றும் கட்சியினா் 40-க்கு மேற்பட்டோர் தைலாபுரம் தோட்டத்துக்கு நேரில் வந்து ராமதாஸை சந்தித்துப் பேசினா். அப்போது, ராமதாஸிடம் உடல் நலம் குறித்து கேட்டறிந்த ஈஆா். ஈஸ்வரன், அங்கிருந்த பாமக செயல் தலைவா் ஸ்ரீ காந்தி பரசுராமனுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராமதாஸ் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது பார்க்க வாய்ப்பு இல்லாமல் போனது. தற்போது அவரது உடல் நலம் விசாரிப்பதற்காக வந்தோம். அவர் ஆரோக்கியத்தோடு நீடூழி வாழ வாழ்த்து தெரிவித்தோம். பாமக ஒருங்கிணைந்து வலிமையான சக்தியாக இருக்க வேண்டுமென்ற விருப்பத்தை ராமதாசிடம் தெரிவித்துள்ளோம். நல்ல விஷயங்கள் நடக்க வேண்டுமென நாங்கள் மனதார விரும்புகின்றோம். திமுக கூட்டணிக்கு பாமக வருவது குறித்து பேசக்கூடியது திமுக தலைவரும், ராமதாசும்தான். கூட்டணி பேசுகிற அதிகாரம் எங்களுக்கு கிடையாது என்றார்.

Next Story