வெல்லட்டும் சமூக நீதி மாநாடு... கே.எஸ்.ராஜ் கவுண்டர் அழைப்பு...! தலைமை சிறப்பு விருந்தினராக துணை முதலமைச்சர் பங்கேற்பு...!

வெல்லட்டும் சமூக நீதி மாநாடு... கே.எஸ்.ராஜ் கவுண்டர் அழைப்பு...! தலைமை சிறப்பு விருந்தினராக துணை முதலமைச்சர் பங்கேற்பு...!
X
புதிய திராவிட கழகத்தின் வெல்லட்டும் சமூக நீதி - ஆறாவது மாநில மாநாடு வரும் 30-11-2025 ஞாயிற்றுக் கிழமையன்று மொடக்குறிச்சி எழுமாத்தூரில் நடைபெற உள்ளது.

புதிய திராவிட கழகத்தின் வெல்லட்டும் சமூக நீதி - ஆறாவது மாநில மாநாடு வரும் 30-11-2025 ஞாயிற்றுக் கிழமையன்று மொடக்குறிச்சி எழுமாத்தூரில் நடைபெற உள்ளது. தமிழக முதலமைச்சரின் நல்லாசியுடன் நடைபெறும் இந்த மாநாட்டில், தலைமை சிறப்பு அழைப்பாளராக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றார். வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி முன்னிலை வகிக்கிறார். முன்னாள் அமைச்சரும் தி.மு.க. மேற்கு மண்டல பொறுப்பாளருமான வி.செந்தில் பாலாஜி மாநாட்டை குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கிறார்கள். அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ், எம்.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர்கள் அந்தியூர் ப.செல்வராஜ், கே.ஆர்.என்.ராஜேஸ் குமார், நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், மாவட்ட கழக செயலாளர்கள் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், என்.நல்லசிவம், கே.எஸ்.மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.சந்திரகுமார், ஏ.ஜி.வெங்கடாசலம், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி சிறப்பிக்க உள்ளனர். தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மாவட்ட கழகச் செயலாளர்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட பல்வேறு இயக்க சங்கத் தலைவர்கள் தமிழக முதலமைச்சர் தலைமையிலான நல்லாட்சிக்கு ஆதரவளித்து மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். சுமார் ஒரு லட்சம் பேருக்கு மேல் மாநாட்டில் கலந்து கொள்ளும் சூழலில், கொங்கு மண்டலத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story