புதுச்சேரிக்கு 600 கோடி வழங்க வேண்டும் - முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரிக்கு 600 கோடி வழங்க வேண்டும் -  முதல்வர் ரங்கசாமி
X
ரங்கசாமி / மோடி 

FENGAL புயல் மற்றும் கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி 600 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்,

புதுச்சேரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் ரங்கசாமி நிவாரணம் அறிவித்தார்.

அதன்படி நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.மற்றும் உயிரிழந்த மாட்டிற்கு ரூ.40,000, உயிரிழந்த கிடாரி கன்று குட்டிக்கு ரூ.20,000, சேதம் அடைந்த படகு ஒன்றுக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்கப்படும். அதே போல சேதம் அடைந்த விலை நிலம் ஒரு ஹெக்டேருக்கு ரூ.30,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் , சேதம் அடைந்த கூரை வீடு ஒன்றுக்கு ரூ.10,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். புதுவையில் மழைக்கு இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட மழை பாதிப்பு காரணமாக, புதுச்சேரியில் ரூ. 100 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை செயலர், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் 208 முகாம் அமைக்கப்பட்டு 85,000 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரிக்கு கடும் பாதிப்பு

இந்த புயலால் கடுமையாக புதுச்சேரி பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட மக்கள், அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் ஏற்படுத்தப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் நிவாரண நிதியாக 600 கோடி வழங்க வேண்டும் என பாண்டிச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்

Tags

Next Story