யார் இந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் - கிங் பார்வையில்

யார் இந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் - கிங் பார்வையில்
X

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

தந்தை பெரியாரின் சகோதரர் ஈவே கிருஷ்ணசாமியின் பேரன் தான் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

இவர் சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் படித்த காலத்தில் இருந்தே காங்கிரஸ் மாணவர் அணி செயலாளராக இருந்தார், 1984 சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக ஆனார் மற்றும் 2004 மக்களவைத் தேர்தலில் கோபி செட்டிபாளையம் தொகுதியில் வென்று 2009 வரை ஒன்றிய இணைய அமைச்சர் ஆக செயலாற்றினார் மற்றும் கடந்த 2000 ஆவது ஆண்டில் முதல் முறையாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக தேர்வானார். 2000 முதல் 2002ம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தார்.. 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டார்,மத்திய அமைச்சரக கடந்த 2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சராக இருந்தார்

மகன் திருமகன் ஈவேரா அவர்கள் மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 2023 ஆம் ஆண்டு மீண்டும் எம்எல்ஏவாக ஆனார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நிலை குறைவால் நவம்பர் 11ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார் இவரது உடல் இன்று மதியம் ஈரோட்டில் உள்ள அவரது சொந்த இல்லத்திற்கு வந்தடையும் என தகவல்.




இவரை பற்றி முழுமையாக கிங் வழங்குகிறது

தந்தை பெரியாரின் பேரன் என்பதனால் இந்திய அரசியலில் தனி அடையாளம் கொண்டவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்,

இவர் தன் அரசியல் வாழ்க்கையை காங்கிரஸ் கட்சியில் அவரது தந்தை சொல்லின் செல்வர் என்று தமிழக அரசியல் களத்தில் அழைக்கப்பெற்ற ஈ. வி. கே. சம்பத் அவர்கள் மரணத்திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் அவரது தந்தையின் நண்பரும், அன்றைய தமிழ்த் திரையுலக முன்னணி நடிகருமான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உடன் (1977–1989) வரை ஒன்றாகப் பயணித்தார்.

மேலும் அப்போது 1984 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் எம். ஜி. ஆர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்த போது இந்தியாவில் அன்றைய காங்கிரஸ் கட்சியின் தலைவியும், பிரதமர் இந்திரா காந்தி பஞ்சாப் தனிநாடு கொள்கைக்கு எதிராகச் செயல்பட்டதால் காலிஸ்தான் அமைப்பினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டு மரணமடைந்தார்.

இதனால் தமிழகத்தில் அதிமுக–காங்கிரஸ் கூட்டணிக்குப் பலமான அனுதாப ஆதரவு அலை வீசியதால் இக்கூட்டணி 1984 நாடாளுமன்ற/சட்டமன்றத் தேர்தலில் பலமான வெற்றி பெற்றது.

இந்தியத் தேர்தல் வரலாற்றிலேயே அதுவரை இல்லாத அளவிற்கு காங்கிரஸ் கட்சி அதிக அறுதிப்பெரும்பான்மையோடு வெற்றி பெற்று ராஜீவ் காந்தி முதல் முறையாகப் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார்.


தமிழகத்தில் அதிமுக–காங்கிரஸ் பலமான வெற்றி பெற்றது அதிமுகவில் தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெற்று எம். ஜி. ஆர் மூன்றாவது முறையாகத் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அத்தேர்தலில் அன்றைய சத்தியமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தேர்தல் அரசியலில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் தலைவர் சிவாஜி கணேசன் ஆதரவு பிரிவினராக வெற்றி பெற்றுத் தமிழகச் சட்டமன்றத்திற்குச் சென்றார்.

அதன் பிறகு தமிழகத்தில் முதல்வர் எம். ஜி. ஆர் மரணத்திற்குப் பிறகு அவரது மனைவி வி. என். ஜானகிக்கு தமிழகச் சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அன்றைய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பிரதமருமான ராஜீவ் காந்தி ஆதரவளிக்க மறுத்ததால் தலைவர் சிவாஜி கணேசன் வி. என். ஜானகிக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய போது அவருடன் பல ஆதரவாளர்களுடன் இளங்கோவனும் வெளியேறினார்கள்.

பின் அப்போது 1989 சட்டமன்றத் தேர்தலில் வி. என். ஜானகியின் அதிமுக (ஜா) அணிக்கு ஆதரவாக சிவாஜி கணேசன் தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்த போது அக்கட்சியின் சார்பில் ஈரோடு பவானி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு இளங்கோவன் தோல்வியடைந்தார்.

பின்னர் அத்தேர்தல் தோல்விக்குப் பிறகு சிவாஜி கணேசன் அவர்கள் தனது தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியை அன்றைய பிரதமர் வி. பி. சிங்கின் ஜனதா தளம் கட்சியோடு இணைத்துவிட்டு அக்கட்சியில் சிவாஜி கணேசன் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்த போதும் கூட இளங்கோவன் அதிலிருந்து பிரிந்து தனது தாய்க் கட்சியான காங்கிரசில் இணைந்து மீண்டும் செயல்படத் தொடங்கினார்.

மேலும் அப்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரான திரு.வாழப்பாடி ராமமூர்த்தியின் பிரிவினராகத் தலைமை ஏற்றுச் செயல்பட்டார்.

அதன் பிறகு முன்னாள் பிரதமரும், அன்றைய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராஜீவ் காந்தி தமிழீழம் தனிநாடு கொள்கைக்கு எதிராகச் செயல்பட்டதால் விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையினரால் தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி மனித வெடி குண்டால் கொல்லப்பட்டார்.

பின்னர் ராஜீவ் காந்தி மரணத்திற்குப் பிறகு ஏற்பட்ட அனுதாப அலையால் மத்தியில் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தியப் பிரதமராக நரசிம்ம ராவும், தமிழகத்தில் அதிமுக சார்பில் முதல்வராக ஜெயலலிதாவும் முதல் முறையாகப் பதவியேற்றனர்.

அப்போது ராஜீவ் காந்தி மரணத்திற்கு முழுமையான காரணமாக இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், அவர்களுக்குத் தமிழகத்தில் உதவி கரமாக இருந்த திமுகவினரையும் அக்கட்சியின் தலைவருமான மு. கருணாநிதியும் இளங்கோவன் கடுமையாக விமர்சித்தார்.


அதன் பிறகு 1996 நாடாளுமன்றத் தேர்தலில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

அத்தேர்தலின் தோல்விக்கு முன்பே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல முன்னணி மூத்த தலைவர்களான மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி, ப. சிதம்பரம் ஆகியோர் பல்வேறு காரணங்களால் காங்கிரஸ் கட்சி உடன் முரண்பட்டுத் தனிக் கட்சி துவங்கி சென்றுவிட்டதால்.

அன்றைய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் சீதாராம் கேசரி இளங்கோவனை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக நியமித்தனர்.


இப்பதவியில் (1996–2001) ஆண்டு வரை மிகவும் திறம்படச் செயல்பட்டார்.

மேலும் அப்போது நடந்த 2001 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டதால் மூப்பனாரின் தமாகா அக்கூட்டணியில் இணைந்ததால் தமிழக மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகி மூப்பனாருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை விட்டுக் கொடுத்தார்.

2004 நாடாளுமன்றத் தேர்தலில் அன்றைய கோபிச்செட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு (214477) வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வானார்.

பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார்.

மேலும் அக்காலகட்டத்தில் மத்திய அமைச்சரவையில் மந்திரியாக இருந்த போதும் தமிழகத்தில் தனது கூட்டணி தலைமைக் கட்சியான திமுக தலைவர் மு. கருணாநிதியைக் கடுமையாக விமர்சனம் செய்தார் குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு சரியான மரியாதை தராததை காரணம் காட்டி மு. கருணாநிதியை அவரது சாதியின் பெயரோடு அவரை விமர்சனம் செய்தார்.

அன்றைய காலகட்டத்தில் (2006-2011) திமுக வெற்றி பெற்ற போதிலும் அறுதிப் பெரும்பான்மை இல்லாமல் போனதை வைத்து திமுக–காங்கிரஸ் கூட்டணி தயவில் ஆட்சி செய்வதை வைத்து முதல்வர் மு.கருணாநிதியின் ஆட்சியைத் திறனற்ற ஆட்சி என்று கூறி கூட்டணிக் கட்சி என்று கூடப் பாராமல் கடுமையாக விமர்சித்தார்.


அதைவிட எதிரணியில் அதிமுக ஜெயலலிதா ஆதரவாளனாகவே தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்.

மேலும் அப்போது மு. கருணாநிதியின் எதிர்ப்பைக் கையில் எடுத்த தேமுதிக கட்சித் தலைவர் நடிகர் விஜயகாந்த் அவர்களைப் பாராட்டி இளங்கோவன் அவரை வீடு தேடிச் சென்று இனிப்பூட்டி மகிழ்ந்தார்.

மேலும் அன்றைய காலகட்டத்தில் தான் இலங்கையில் நடந்தேறிய ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு எதிராகச் செயல்பட்டார்.

அதே எதிர்ப்பு நிலைப்பாட்டில் எதிரணியில் அதிமுகவில் அடுத்த காலகட்டத்தில் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர விரும்பி அவரது ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தாலும் அந்த நேரத்தில் ஜெயலலிதா கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை ஈழத்தமிழர்கள் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது. இளங்கோவன் மற்றும் ஜெயலலிதாவிற்கு இடையே அரசியல் களத்தில் பலமான எதிர்ப்பு நிலை உருவானது.

அதன் பிறகு நடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு மக்களவைத் தொகுதியிலும், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் திருப்பூர் மக்களவைத் தொகுதியிலும் ஆகிய இரண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் இளங்கோவன் தோல்வி அடைந்ததற்குக் காரணமே அப்போது தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவில் முதல்வர் மு.கருணாநிதியைக் கூட்டணிக் கட்சி என்று கூடப் பாராமல் கடுமையாக விமர்சித்தார்.

அதே சமயம் எதிர்க்கட்சியான அதிமுகவில் ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சித்ததாலே தமிழக மக்களிடையே பெரியார் வீட்டு பேரன் என்ற நல்ல பெயர் இருந்த போதிலும் இளங்கோவன் தமிழகத்தின் அன்றைய இரு பெரும் மக்கள் ஆதர்ச தலைவர்களான கருணாநிதி/ஜெயலலிதாவையும் அரசியல் நாகரிகம் கடந்து தரம் தாழ்ந்து பேசியதாலே தமிழக மக்கள் மத்தியில் இளங்கோவன் போட்டியிட்ட இரண்டு தேர்தலிலும் தொடர் தோல்வியடைந்தார் என்றும் கூறப்படுகிறது.


பிறகு (2014–2017) வரை காலகட்டத்தில் மீண்டும் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக–காங்கிரஸ் கூட்டணியில் 41 தொகுதிகளை அன்றைய திமுக தலைவர் மு. கருணாநிதியிடம் மிகவும் கட்டாயம் செய்து வாங்கினார்.

அதைவிட அப்போது தேர்தல் காலத்தில் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பிரதமர் நரேந்திர மோடி உடன் இணைத்துத் தவறாக ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசிய சர்ச்சை தமிழக மக்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியதால் காங்கிரசுடன் இணைந்து திமுகவும் அத்தேர்தலில் தொடர் தோல்வி அடைவதற்கு இவரே காரணமாக இருந்தார் என்றும் கூறப்படுகிறது.

அதே எதிர்ப்பு மனநிலையில் இருந்த தமிழக மக்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை விமர்சனம் செய்தவர் என்ற காரணத்தால் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை அடுத்து நடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டும் அவரைத் தோல்வியடையச் செய்தனர்.

அதன் பிறகு 2023 ஆண்டு அவரது மூத்த மகனும் தமிழக காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவெரா திடீர் நெஞ்சு வலியால் எதிர்பாராத மரணத்தைத் தழுவினார் பின் அவர் விட்டு சென்ற ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் பல பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று காங்கிரஸ் கட்சி சார்பாகச் சட்டமன்ற வேட்பாளராக இளங்கோவன் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார் சுமார் 39 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்வாகி சென்றார்.

அத்தேர்தலில் எதிரணியில் அதிமுக வேட்பாளர் கே. எஸ். தென்னரசுவை 42 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இவரது தந்தை தான் ஈ.வி.கே.எஸ் சம்பத்குமார் அவர்கள் ..






Tags

Next Story