கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் : சட்டப்பேரவையில் செல்வப்பெருந்தகை கோரிக்கை!!

X
செல்வப் பெருந்தகை
கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் செல்வப்பெருந்தகை கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக கலைஞர் தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, இந்தியாவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது என்றால் அது கலைஞர் போட்ட விதை என்று கூறினார். மேலும் பேசிய ஜி.கே.மணி, எளிய மக்களின் துயர் துடைத்தவர் கலைஞர், பல்கலை.க்கு அவரது பெயரை வைக்க வேண்டும், என்றார்.
Next Story