விழுப்புரத்தில் ஏடிஎம்-ல் நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்த 4 பேருக்கு போலீசார் வலை!!

X
ஏ.டி.எம்
விழுப்புரத்தில் ஏடிஎம்-ல் அலுமினிய தகடு மூலம் நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். எஸ்.பி.ஐ. ஏடிஎம்-ல் பணம் வெளியே வரும் பகுதியில் அலுமினிய தகடை மர்மகும்பல் வைத்து சென்றுள்ளது. வாடிக்கையாளர் ஏடிஎம் கார்டில் இருந்து பணம் எடுத்தபோது வங்கிக் கணக்கில் இருந்து பணம் டெபிட் ஆகியுள்ளது. வாடிக்கையாளர்களின் பணம் டெபிட் ஆனபோதும் ஏடிஎம்-ல் இருந்து பணம் வரவில்லை. நள்ளிரவில் ஏடிஎம்-ஐ கள்ளச்சாவி மூலம் திறந்து மர்மகும்பல் வாடிக்கையாளர்களின் பணத்தை எடுத்துள்ளது.
Next Story