தமிழ்நாட்டின் உயர்கல்வி மாணவர் சேர்க்கை இந்தியாவிலேயே அதிகபட்சமாக 47 சதவீதமாக உள்ளது: மாநில திட்டக்குழு ஆய்வறிக்கை!!

X
தமிழ்நாட்டின் உயர்கல்வி மாணவர் சேர்க்கை இந்தியாவிலேயே அதிகபட்சமாக 47 சதவீதமாக உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மாநில திட்டக்குழு அளித்த ஆய்வறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது. நிலையான வளர்ச்சிக்கான குறியீடில் தேசிய சராசரியை தாண்டி தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. வறுமை ஒழிப்பு மற்றும் சமூக பாதுகாப்பு அம்சங்களிலும் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தேவைப்படுவோருக்கு 100 சதவீதம் வேலை வழங்கப்படுகிறது.
Next Story
