முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்தியா-ஆஸ்திரேலியா நாளை மோதல் !!
X
sports
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை நடக்கிறது. பெர்த்தில் இரு அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி காலை 7.50க்கு தொடங்க உள்ளது. ஆஸ்திரேலியா சுற்றுபயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 போட்டிகள் உள்ள டெஸ்ட் தொடரில் களமிறங்க உள்ளனர்.
கடந்த இருமுறை ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி ஹாட்ரிக் அடிக்க முனைப்பு. ஆஸ்திரேலிய அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பையை கடந்த 10 ஆண்டுகளாக வென்றது இல்லை. முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்பதால் பும்ரா அணியை வழிகாட்டுவார். வேகப்பந்துக்கு சாதகமான மைதானம் என்பதால் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம்பிடிப்பார்கள்.
Next Story