சென்னையில் ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் கார் பந்தயம் நாளை தொக்கம்!

சென்னையில் ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் கார் பந்தயம் நாளை தொக்கம்!
X

 ஃபார்முலா 4 

சென்னையில் நாளை ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் கார் பந்தயம் தொடங்கவுள்ளது.

தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) மூலம் சென்னை ஃபார்முலா 4 ரேசிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயத்தை நடத்தவுள்ளது. ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இந்தியாவில் முதல் இரவு நேர ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயத்தை நடத்த உள்ளது. இதன் மூலம் தெற்காசியாவிலேயே இரவு ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை நடத்தும் முதல் நகரமாக சென்னை திகழ்கிறது.

3.5 கிமீ சுற்றளவு கொண்ட சர்க்யூட்டில் இப்பந்தயம் நடத்தப்படுகிறது. தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் மவுண்ட் ரோடு ஆகியவற்றில் இந்த சர்க்யூட் அமைந்துள்ளது. இது தெற்காசியாவிலேயே மிக நீளமான ஸ்ட்ரீட் சர்க்யூட் எனபது குறிப்பிடத்தக்கது.

கார் பந்தயத்தை பொதுமக்கள் பார்த்து ரசிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது. போட்டியை பார்க்க வரும் பார்வையாளர்கள் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம், கலைவாணர் அரங்கம், சென்னை பல்கலைக்கழகம், கடற்கரை ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags

Next Story