ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களுக்கான மெகா ஏலம் !!
X
IPL
ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களுக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று தொடங்கியது. 1,574 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்திருந்த நிலையில் 577 வீரர்கள் இறுதியாக ஏலத்தில் இடம் பெற்றனர். ஜெட்டா நகரில் தொடங்கியுள்ள ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுக்கான மெகா ஏலம் நாளையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. 10 அணி வீரர்கள் பங்கேற்கும் 18-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் அடுத்த ஆண்டு மார்ச் 14ல் தொடங்கி மே25 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2 வது நாளாக ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களுக்கான ஏலம் சவுதி அரேபியாவில் இன்றும் நடைபெறுகிறது. ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.
Next Story